Friday, June 18, 2010

மனதின் இயல்பு - ஓஷோ


மனம் என்று ஒரு தனிப்பொருள் இல்லை. இருப்பவை எண்ணங்கள் மட்டுமே . எண்ணங்கள் உங்களிலிருந்து சுயேச்சையாக நிலவுகின்றன .உங்களின் சொந்த தன்மையுடன் ஒன்றியவையாக அவை இல்லை . எண்ணங்கள் உங்களுடையவை என நீங்கள் நினைத்துக்கொண்டே போகிறீர்கள் . அதுமட்டுமல்ல உங்கள் எண்ணங்களுக்காக நீங்கள் சண்டை பிடிக்கிறீர்கள் . " இதுவே எனது எண்ணம், இதுவே உண்மை" என்கிறீர்கள் . நீங்கள் அதற்காக விவாதிக்கிறீர்கள் , தர்க்கம் செய்கிறீர்கள் , வாதாடுகிறீர்கள் . " இது என் கருத்து" என நிறுவ போராடுகிறீர்கள் .
எந்த எண்ணமும் உங்களுடையவை அல்ல . எந்த எண்ணமும் அசலானது அல்ல . எல்லா எண்ணங்களும் கடன் வாங்கப்பட்டவையே . அவை இரண்டாவதாக ( உங்களிடம் ) வந்தவை கூட அல்ல . ஏனெனில் உங்களுக்கு முன் கோடிக்கணக்கான மக்கள் அதே எண்ணங்களை தமதென்று உரிமை பாராட்டி புழங்கி இருக்கிறார்கள் . பொருட்களைப்போலவே எண்ணங்களும் வெளியில் தான் உள்ளன . அறிவியலானது சடப்பொருளுக்குள் ஆழமாக போகப்போக - பொருட்கள் என்பவை எண்ணங்களே என்பது அதற்கு அதிகமதிகம் தெளிவாகிறது என்று மாபெரும் விஞ்ஞானி எடிங்டன் ஓரிடத்தில் கூறியிருக்கிறார் . அது அப்படி இருக்கலாம். உங்களுக்குள்ளேயே நீங்கள் மென்மேலும் ஆழ்ந்து சென்றால் எண்ணங்கள் அதிகமதிகமும் பொருளைப்போல் தோன்றும் . உண்மையில் இந்த இரண்டுமே ஒரே நிகழ்வின் இரு அம்சங்களே : பொருள் ஒரு எண்ணமே , எண்ணம் ஒரு பொருளே .

Thursday, April 29, 2010

இருபத்தியெட்டு : நான் யார்? திரு.ஹரிசந்திரனோடு ஓர் கலந்துரையாடல்.


பதிவு#1
நீங்கள் எழுதியது23 டிசம்பர் 2009 அன்று, 08:14 மணிக்கு

நான் யார்?

பதிவு#2
Hrai Chandran எழுதியது 26 டிசம்பர் 2009 அன்று, 08:55 மணிக்கு
இந்தஉலகில் தாயின் கருவறை வாசம் முடிந்து உலகியல் வாசம் வரும் போது நம்முடன் வருவது நம் உயிர் மட்டும் தான் இதுதான் மாறாது இமைபொழுதும் நம்மை விட்டு நீங்காது ,உடல் நான்என்று அது நிற்க்கும் போது உயிர் பிரதிஓன்றாக தோன்றும்,உயிர் நான்என்று நினைக்கும்போது இந்த உலகமே என் உடலாக நிற்கும்.இதை எப்படி அறிவது

இதற்கு முதல் விழக்கம்
அறிவது என்பதன் பொருள்யாது அறியாதஓன்றை பற்றித் தெரிந்துக்கொள்வது.அந்த பொருளை முன்பு அறியாமல் இருந்துஇருக வோண்டும் அல்லது இனி புதிய,நம்மிடம்யில்லாத ஓன்றை அறியும் ஆவலவந்துயிருக்கவோண்டும்,ஆனால் உயிரை பற்றிய விஷயம் அவ்வாறில்லை ஏன் என்றால் நாம் அதை விட்டு பிறிந்த்ததுயில்லை,நாம்இனியும் அதைவிட்டு பிறிய போவது யில்லை,இதுவே பூரணஅறிவு,இதைஅறிய வேரோர் அறிவுகிடையாது ,இப்படியிருக்க நாம்யினி எதைஅறியவோண்டும்,.இது மூன்றாவது கோள்வி.

சூரியன் எப்பொழுதும் பிரகாசித்துக் கொண்டேதான் இருக்கிறது,ஆயினும் நாம் சூரியனைக் காணவிரும்பினால் அதனை நோக்கி நம் கண்களைத் திருப்பிப் பார்க்க வோண்டுமல்வா,அதேப் போல் நான்இருக்கிறேன் என்றதன்மை பொருளின் வடிவில் நம்முள் இயல்பாகயிருக்கும் தன்னிலையே அறிய வோண்டுமானால் நம் கவனத்தை,-நாட்டத்தை,தன்னை நோக்கிதிருப்ப வோண்டும்..

முறையிடு

பதிவு#3
நீங்கள் எழுதியது29 டிசம்பர் 2009 அன்று, 02:05 மணிக்கு
இந்தஉலகில் தாயின் கருவறை வாசம் முடிந்து உலகியல் வாசம் வரும் போது நம்முடன் வருவது நம் உயிர் மட்டும் தான் இதுதான் மாறாது இமைபொழுதும் நம்மை விட்டு நீங்காது ,உடல் நான்என்று அது நிற்க்கும் போது உயிர் பிரதிஓன்றாக தோன்றும்,உயிர் நான்என்று நினைக்கும்போது இந்த உலகமே என் உடலாக நிற்கும்.இதை எப்படி அறிவது ?


௧,இந்தஉலகில் தாயின் கருவறை வாசம் முடிந்து உலகியல் வாசம் வரும் போது நம்முடன் வருவது நம் உயிர் மட்டும் தான்.
பதில்; நம்முடன் வருவது நம் உயிர் மட்டும் தான் என நம்மால் அப்போது அறிய முடியாது.

௨,உடல் நான்என்று அது நிற்க்கும் போது உயிர் பிரதிஓன்றாக தோன்றும்?
பதில்; இதுவும் அப்போது நம்மால் அறிய முடியாது.

௩,உயிர் நான்என்று நினைக்கும்போது இந்த உலகமே என் உடலாக நிற்கும்.இதை எப்படி அறிவது ?
பதில்; இதுவும் அந்த வயதில் சாத்தியமில்லை.

இது வேறு பதில்; உயிர் நான்என்று நினைக்கும் தெளிவான மனநிலை வாய்க்கும் வயதில், ஐந்து புலன் உணர்வுகளை (தொகுப்பு உணர்வு) தாண்டி ஆறாவது புலன் உணர்வான நமது முதுகு தண்டின் (மூல இருப்பு உணர்வு) உணர்வை அறிந்து அதில் கவனத்தை நிலை நிறுத்தினால், (நிறுத்த முடிந்தால்) உனது தேவைகள் அனைத்தும் முடிவுக்கு வருகின்றன. ( அப்போது உனக்கு எந்த தேவையும் இருக்காது. எந்த தேடலும் இருக்காது. நீ அக்கணம் பரிபூர்ண நிலையில் இருப்பதால், நீ வேறு இந்த உலகு வேறு எனும் ( பொருள்தன்மை)உன்னிடம் இருக்காது. அனைத்தும் நானே எனும் அருள்தன்மை உனக்குவாய்த்துவிடும்.

கருத்தை அழிக்க

பதிவு#4
நீங்கள் எழுதியது29 டிசம்பர் 2009 அன்று, 02:33 மணிக்கு
இதற்கு முதல் விழக்கம்
அறிவது என்பதன் பொருள்யாது அறியாதஓன்றை பற்றித் தெரிந்துக்கொள்வது.அந்த பொருளை முன்பு அறியாமல் இருந்துஇருக வோண்டும் அல்லது இனி புதிய,நம்மிடம்யில்லாத ஓன்றை அறியும் ஆவலவந்துயிருக்கவோண்டும்,ஆன
ால் உயிரை பற்றிய விஷயம் அவ்வாறில்லை ஏன் என்றால் நாம் அதை விட்டு பிறிந்த்ததுயில்லை,நாம்இனியும் அதைவிட்டு பிறிய போவது யில்லை,இதுவே பூரணஅறிவு,இதைஅறிய வேரோர் அறிவுகிடையாது ,இப்படியிருக்க நாம்யினி எதைஅறியவோண்டும்,.இது மூன்றாவது கோள்வி.?
௧, அறிவது என்பதன் பொருள்யாது அறியாதஓன்றை பற்றித் தெரிந்துக்கொள்வது.

பதில்; அறிவது என்பது -ஒரு மிளகாயை நீங்கள் கடிக்க நேர்ந்தால் அதன் காரத்தை எப்படி அறிகிறீர்களோஅப்படி.


௨, அந்த பொருளை முன்பு அறியாமல் இருந்துஇருக வோண்டும்?

பதில்; மிளகாயை நீங்கள் முன்பே அறிந்து இருந்தாலும், அறியாமல் இருந்தாலும் அதை கடிக்க நேர்ந்தால், இப்போது அதை அறிந்து கொள்வீர்கள்.

௩.அல்லது இனி புதிய,நம்மிடம்யில்லாத ஓன்றை அறியும் ஆவலவந்துயிருக்கவோண்டும்,

பதில்; நம்மிடம் எப்போதுமே அது இருக்கிறது.(அதுவே நமது இயல்பும் கூட) நம்மிடம் அது இல்லை என ஒரு கருத்து மட்டுமே நம்மிடம் இருக்கிறது: ஆவல் என்பது உண்மையின் மீதும், இந்த வாழ்வின் சாந்நித்தியத்தின் மீதும் நமக்கு அக்கறை இருக்குமானால் ,ஆவல் தோன்றும்.
௪,
ஆனால் உயிரை பற்றிய விஷயம் அவ்வாறில்லை ஏன் என்றால் நாம் அதை விட்டு பிறிந்த்ததுயில்லை,நாம்இனியும் அதைவிட்டு பிறிய போவது யில்லை,


பதில்;??????????????????????


௬, இதுவே பூரணஅறிவு,


பதில்;!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


இதைஅறிய வேரோர் அறிவுகிடையாது ,இப்படியிருக்க நாம்யினி எதைஅறியவோண்டும்,.இது மூன்றாவது கோள்வி.?

பதில்; நமக்கு தெளிவான மன நிலை வாய்க்க வில்லை எனில் -------இது மூன்றாவது கேள்வி மட்டும் அல்ல, வாழ்க்கையே கேள்விதான்.




கருத்தை அழிக்க

பதிவு#5
நீங்கள் எழுதியது29 டிசம்பர் 2009 அன்று, 02:37 மணிக்கு
சூரியன் எப்பொழுதும் பிரகாசித்துக் கொண்டேதான் இருக்கிறது,ஆயினும் நாம் சூரியனைக் காணவிரும்பினால் அதனை நோக்கி நம் கண்களைத் திருப்பிப் பார்க்க வோண்டுமல்வா,அதேப் போல் நான்இருக்கிறேன் என்றதன்மை பொருளின் வடிவில் நம்முள் இயல்பாகயிருக்கும் தன்னிலையே அறிய வோண்டுமானால் நம் கவனத்தை,-நாட்டத்தை,தன்னை நோக்கிதிருப்ப வோண்டும்?

பதில்; ஆமாம், ஆமாம், ஆமாம்.



கருத்தை அழிக்க

பதிவு#6
Hrai Chandran எழுதியது 30 டிசம்பர் 2009 அன்று, 16:25 மணிக்கு
௧,இந்தஉலகில் தாயின் கருவறை வாசம் முடிந்து உலகியல் வாசம் வரும் போது நம்முடன் வருவது நம் உயிர் மட்டும் தான்.
பதில்; நம்முடன் வருவது நம் உயிர் மட்டும் தான் என நம்மால் அப்போது அறிய முடியாது.

ஐயா,
பிறந்ததில் இருந்து இதுவரைக்கும் மாறாதது எது.
எப்போதும் நம்மை விட்டு நீங்காதது எது.
இது தான் என் கேள்வியின் நோக்கம்.
நாம் பிறத்தவுடன் காலம் வந்துவிடும் அதன்வுடன் மனதும் உருவாகிவிடும் இந்த இரண்டும் இருபடிமூலங்கள் இதில் ஒன்றுயில்லாமல் ஒன்றைஅறியமுடியாது வாஸ்தவம் தான்.
மனதால் நாம் அனைத்தையும் காண்கின்றேம் நாம் என்று அபிமானிக்கும் இந்த உடலையும் மனம் உருவானபிறகுதான் அறிகிறோம் சரிதானே.அப்போது அறிவு என்பதும் அறியாமை என்பதும் எதற்கு சொந்தம் மனதிற்கு அல்லவா. இவ்வாறுயிருக்க அந்தமனதைக் கொண்டு நம்மை அறியமுடியுமா.காலம் என்பது மனதிற்கு உயிர் அதுயில்லாமல் அது வாழாது அப்படியிருக்க இப்போது உன்னால் அறியமுடியாது என்பது சரியா,,,,ஏன்அறியமுடியாது விழக்கவும் ஐயா.நன்றி,,

முறையிடு

பதிவு#7
நீங்கள் எழுதியது01 ஜனவரி 2010 அன்று, 10:28 மணிக்கு
பிறந்ததில் இருந்து இதுவரைக்கும் மாறாதது எது.?
நமது இருப்பு நிலை.
எப்போதும் நம்மை விட்டு நீங்காதது எது.?
நான் எனும் நமது கருதுகோள். (நமது கருத்து.)

நாம் பிறத்தவுடன் காலம் வந்துவிடும்....................
காலம் என்பது நாம் கருதுகிற மாதிரி நேற்று,இன்று,நாளை என இறந்த காலம், நிகழ காலம், எதிர் காலம் என்று இல்லை.(இப்படி நாம் கருது கிறோம் ) நமது கருத்தில் மட்டுமே இப்படி தோன்றுகிறது. காலம் என்பது, இக்கணம் மட்டுமே!.
அதன்வுடன் மனதும் உருவாகிவிடும்........................
மனம் என்பது செயல்படும் களம் நேற்று,இன்று,நாளை எனும் நமது கருத்து களத்தில் மட்டுமே.
மனதால் நாம் அனைத்தையும் காண்கின்றேம்......................
மனதால் நாம் அனைத்தையும் காண்பதில்லை.(அப்படி கருதுகிறோம்.) பொருளாக(உரு) உள்ளதை மட்டுமே காணமுடியும்.அருவாக (அலை) உள்ளதை அறிய முடிவதில்லை.
நாம் என்று அபிமானிக்கும் இந்த உடலையும் மனம் உருவானபிறகுதான் அறிகிறோம் சரிதானே.?.............
சரிதான்.
அப்போது அறிவு என்பதும் அறியாமை என்பதும் எதற்கு சொந்தம் மனதிற்கு அல்லவா?...............
சரிதான்.
இவ்வாறுயிருக்க அந்தமனதைக் கொண்டு நம்மை அறியமுடியுமா?..................
மனதைக்கொண்டு அனைத்தையும் அறிய முடிவதில்லை.

காலம் என்பது மனதிற்கு உயிர் அதுயில்லாமல் அது வாழாது .....................
காலம் என்பது மனதிற்கு இருப்பு. கருத்தே மனதிற்கு உயிர்.

இப்போது உன்னால் அறியமுடியாது என்பது சரியா,,,,ஏன்அறியமுடியாது ?.............................
மனத்தால் நமது தூய இருப்பு நிலையை முழுமையாக அறிய முடிவதில்லை. காரணம், மனம் என்பது பொருள் (உரு) சார்ந்தே ஊகித்து பழகி வந்துள்ளது. நமது தூய இருப்புநிலையோ அருவானது. அதை ஒரு கணம் நமது மனம் அறிந்தாலும் அதில் நிலைத்து நிற்க முடிவதில்லை.(அந்த ஒரு கண -எண்ணமற்ற நிலை- நிலையை தான் நாம் இன்பம் என்று துய்க்கிறோம். ) ஏனெனில் ஒரு கணத்தில் மட்டுமே உயிர்ப்புதன்மை உள்ளது. (நேற்று,இன்று,நாளை என்பதான கற்பனைகளில் உயிர்ப்பு கிடையாது. ).

கருத்தை அழிக்க

Post deleted on 01 ஜனவரி 2010 at 14:01
பதிவு#9
Hrai Chandran எழுதியது 01 ஜனவரி 2010 அன்று, 16:59 மணிக்கு
//பிறந்ததில் இருந்து இதுவரைக்கும் மாறாதது எது.?
நமது இருப்பு நிலை.//
இது நல்லபதில் ஏற்றக்கிட்டேன்.அதில் இருப்பு நிலை பற்றி கொஞ்சம் விழக்கமாகச் சொல்லுங்களே,,,

//நாம் பிறத்தவுடன் காலம் வந்துவிடும்....................
காலம் என்பது நாம் கருதுகிற மாதிரி நேற்று,இன்று,நாளை என இறந்த காலம், நிகழ காலம், எதிர் காலம் என்று இல்லை.(இப்படி நாம் கருது கிறோம் ) நமது கருத்தில் மட்டுமே இப்படி தோன்றுகிறது. காலம் என்பது, இக்கணம் மட்டுமே!.//
இதில் இக்கணம் என்பதின் விழக்கம்
புரியவில்லை ,இதுவும்
காலத்திற்க்கு வுட்பட்டதுதானே,காலாதீதநிலை கிடையாது அல்லவா.

கருத்துகிறோம்,இதில் கருதுவது யார்,

முறையிடு

பதிவு#10
நீங்கள் எழுதியது02 ஜனவரி 2010 அன்று, 01:44 மணிக்கு
காலம் என்பது, இக்கணம் மட்டுமே!.//
இதில் இக்கணம் என்பதின் விழக்கம்
புரியவில்லை ,இதுவும்
காலத்திற்க்கு வுட்பட்டதுதானே,காலாதீதநிலை
கிடையாது அல்லவா..... இது ஹரியின் கேள்வி.
பதில்; இக்கணம் என்பதின் விளக்கம் ; காலம் என்பது இந்த நொடி, இப்போது, இங்கு, இந்த கணம் சற்று முன் இருந்த நொடி இப்போது இல்லை. எப்போதுமே இந்த கணம் மட்டுமே இருக்கிறது. சற்று முன் , பிறகு என்பதெல்லாம் நமது கருத்து. ஒரு நேற்றையாவது,ஒரு நாளையாவது நாம் கண்டிருக்கிறோமா? எப்போதுமே இன்றுகள் தான் வருகின்றன. இக்கணம் என்பது மட்டுமே உயிர்ப்பு.சற்றுமுன், பிறகு என்பது ஓர் கருத்து. இதில் அதீதமாக ஒன்றும் இல்லை.

கருத்துகிறோம்,இதில் கருதுவது யார்,?ஹரியின் கேள்வி

கருதுவது , நான், எனது எனும் நமது கருத்துருவான மனம்தான் கருதுகிறது. மனம் நமது இருப்பு நிலையின் விகசிப்பு. இந்த விகசிப்பு ,பொருள் சார்ந்தும், நமது நினைவு திறன் ஆன ( memory )கற்பனைகளையும் உறவு கொண்டுசெயல்படுகிறது.

கருத்தை அழிக்க

பதிவு#11
நீங்கள் எழுதியது02 ஜனவரி 2010 அன்று, 02:32 மணிக்கு
இருப்பு நிலை பற்றி கொஞ்சம் விழக்கமாகச் சொல்லுங்கலேன். ...ஹரியின் கேள்வி.

உண்மையிலேயே அந்த இருப்பு நிலையே நமக்கு உதவினால் ஒழிய சரியான பதில் வருமாவென தெரியவில்லை. இருப்பினும் முயற்சிப்போம்.

இருப்புநிலை எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. இந்த பிரபஞ்சம் தோன்றின முதல் வெடிப்பும் இந்த இருப்பிலிருந்தே தோன்றி இருக்கிறது. அந்த இருப்பிலிருந்து தான் எல்லாமே விளக்கம் ஆகியுள்ளது. ( கேவலம் நானும் , நீங்களும் கூட) ---இந்த இருப்பு, தான் இருக்கிறேன் என எண்ணியபொழுது இந்த பிரபஞ்சம் தோன்றியது என ஞானம் அடைந்தவர்கள் சொல்கிறார்கள். ( இந்த பொருட்களால் ஆன பிரபஞ்சம் அந்த இருப்பு நிலையின் எண்ணம் என்றும் சொல்கிறார்கள்.) அதன் எண்ணமே பிரபஞ்சம் என்றால் ? அந்த இருப்பின் வியக்தியை யார் அறிவார்? ஆனால் நாமும் அந்த இருப்பிலேயே இருக்கிறோம். இந்த உண்மையை நாம் அறிய முடியாமல் தடுப்பது நமது மனம் சார்ந்த ( நமக்கு வழக்கமான) நான் எனும் தவறான கருதுகோள். இந்த ஐம்புலன் தொகுப்பான மனதின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, ஆறாம் புலனான தண்டுவட உணர்வில் ஆழ்ந்து அதன் மூல உணர்வான இருப்பு நிலையை அறியமுயற்சிப்போம்.

கருத்தை அழிக்க

பதிவு#12
Hrai Chandran எழுதியது 02 ஜனவரி 2010 அன்று, 09:20 மணிக்கு
///ஆறாம் புலனான தண்டுவட உணர்வில் ஆழ்ந்து அதன் மூல உணர்வான இருப்பு நிலையை அறியமுயற்சிப்போம்.///ஐயா பதில்

என் கேள்வி தண்டுவடம் என்பது மனதால் புலன்மூலம் அறியபடும் ஒரு உருப்பு அதில் ஆறாம் அறிவு,அதாவது புலன்கடந்த அறிவை எப்படி உணரமுடியும்,பலனால் புலன்கடந்த உணர்வை எப்படி அறிவது,,,

முறையிடு

பதிவு#13
Hrai Chandran எழுதியது 02 ஜனவரி 2010 அன்று, 09:23 மணிக்கு
ஐயா
மன்னிக்கவும்,
நீங்கள் என் கேள்விக்கு பொருமையாக பதில் எழுதுவது உங்கள் நல் குணத்தை காண்பிக்கிறது.ஆகையால் எதாவது தவறுதலாக கேட்டால் மன்னிக்கவும்,

முறையிடு

பதிவு#14
நீங்கள் எழுதியது04 ஜனவரி 2010 அன்று, 06:01 மணிக்கு
திரு; ஹரிஹரன்: என் கேள்வி தண்டுவடம் என்பது மனதால் புலன்மூலம் அறியபடும் ஒரு உருப்பு அதில் ஆறாம் அறிவு,அதாவது புலன்கடந்த அறிவை எப்படி உணரமுடியும்,பலனால் புலன்கடந்த உணர்வை எப்படி அறிவது,,,

பதில்: ஐயா, தண்டு வடம் என்பது நமது இருப்பு உணர்வின் மைய பிரதேசம் . நமது உயிர்,உடல் உற்பத்தி இந்த மைய பிரதேசத்திலிருந்தே உருவாகிறது. தாயின் கருவில் முதன் முதலில் தோன்றுவது இந்த தண்டுவட பொருளே. நமது ஐந்து புலன் உணர்வையும் நாம் அறிவது இந்த தண்டு வடத்தில் தான். நமது மொத்த உணர்வின் மையமே தண்டு வடம் தான். இந்த அண்ட சராசரத்தின் இருப்பும், நமது இருப்பும் சந்திக்கும் இடமும் இந்த தண்டுவடமே. இந்த தண்டுவட உணர்வின் மய்யத்துக்கு போனால் ,அங்கு பிரபஞ்ச மைய்ய உணர்வும், நமது இருப்பு உணர்வும் சங்கமிக்கும் போது நாம் வேறு, இந்த பிரபஞ்சம் வேறு எனும் பிரித்துணரும் தன்மை போய் அனைத்தும் ஒன்று எனும் --ஆதி சங்கரர் சொன்ன அத்வைத நிலை தோன்றும். அந்த நிலைதான் , அன்றும் இருந்தது, இன்றும் இருக்கிறது, என்றும் இருக்கும். மற்றவை அனைத்தும் மாயையே. ஒரு வெப் முகவரி இதை கவனியுங்கள்............http://www.babycenter.com/fetal-development-images-2-weeks

கருத்தை அழிக்க

பதிவு#15
நீங்கள் எழுதியது04 ஜனவரி 2010 அன்று, 06:19 மணிக்கு
மற்றும் ஒரு உயிர் உற்பத்திற்ககான அடிப்படை நிகழ்வான தாம்பத்திய உடலுறவு நிகழ்வின்போதும் அந்த ஆணும், அந்த பெண்ணும் தங்கள் ஐந்து புலன் உணர்வையும் கடந்து அந்த மைய்ய இருப்பு நிலையையே உணர்கின்றனர். ஒரு உயிரின் உற்பத்தி துவக்கமே மைய்ய இருப்பு நிலையிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. இந்த இருப்பு நிலை உணர்வைத்தான் உலகிலேயே மிக பெரிய இன்பம் என்று கருதுகின்றனர். அந்த இன்பம் ஒரு ஆணுக்கு , ஒரு பெண்ணிடம் இருந்து கிடைப்பதாக எண்ணுகிறான். ஒரு பெண் ஒரு ஆணிடம் இருந்து கிடைப்பதாக எண்ணுகிறாள். அந்த உணர்வு நம்மிடமே உணரப்பட்டது என்பதை கவனிக்க தவறி விடுகின்றனர். அது நமது இருப்பு நிலையே. அதனால்தான் முன்னோர்கள் உடலுறவை சிற்றின்பம் என்றும் , ஞான நிலையாம் அநுபூதி நிலையை பேரின்ப நிலை என சொல்லிஉள்ளனர்.

கருத்தை அழிக்க

பதிவு#16
Hrai Chandran எழுதியது 04 ஜனவரி 2010 அன்று, 09:00 மணிக்கு
///ஐயா, தண்டு வடம் என்பது நமது இருப்பு உணர்வின் மைய பிரதேசம் . நமது உயிர்,உடல் உற்பத்தி இந்த மைய பிரதேசத்திலிருந்தே உருவாகிறது. தாயின் கருவில் முதன் முதலில் தோன்றுவது இந்த தண்டுவட பொருளே. நமது ஐந்து புலன் உணர்வையும் நாம் அறிவது இந்த தண்டு வடத்தில் தான். நமது மொத்த உணர்வின் மையமே தண்டு வடம் தான்.///
நமது இருப்பு உண்ர்வின் மையபிரதேசம்,,,என்று சொல்லும் நீங்கள் நமக்கு ஒரு எல்கை குறிப்பிட்டு இது தான் என்று சொல்வது மாதிரி உள்ளது,,,இல்லாத ஒன்றை ஒரு மையமாக எப்படி குறிப்பிட முடியும்,

மனதால் தானை தண்டுவடத்தை உணர்கின்றோம்,அந்த மனம் கொண்டு நம்மை எப்படி உணரமுடியும்,ஒரு மையம் என்று சொல்லும் போது அது விரிய ஒரு இடம் வோண்டும் அல்லவா,இது இருபடி மூலம் அல்லவா,தன்னிலை ஆகாதன்றோ.தன்னிலை தானே நான் யார் என்பதன் விழக்கம்,

முறையிடு

பதிவு#17
Hrai Chandran எழுதியது 04 ஜனவரி 2010 அன்று, 09:13 மணிக்கு
ஓர் நாய் சுடு காட்டிற்குப் போயிற்று.சதைப்பற்று முழுவதும் எரிந்துபோய் மிஞ்சிக் கிடக்கும் கூரிய எலும்பு ஓன்றை அது கவ்விக்கொண்டு வந்த்து அதை வாயிலிட்டு பற்களால் பலமுறை கடித்துப் பார்த்த்து எலும்பு நாயின் வாயில் குத்தி இரத்தம் வடிய ஆரம்பித்த்து இரத்தம் தோய்ந்த அவ் வெலும்பை நாய் கீழே போட்டுப் பார்த்த்து எலும்பின் மேற்புறம் இரத்தம் காணப்படுவதைக் கொண்டு ஓகோ கடிக்க்க் கடிக்க எலும்பினுள்ளிருந்து இரத்தம் வருகிறது,என்று நினைத்து,அவ்விரத்த்தை நக்கிக் குடித்த்து மறுபடியும் வாயிலிட்டு முன்னிலும் பன்மடங்கு அதிக பிரயாசையோடு கடித்த்து தன் வாயில் மேலும் புண்கள் உண்டாகி இரத்தம் எலும்பின் மேற் பெருகிற்று. மிண்டும் நாய் எலும்பை கீழே போட்டு இரத்த்தை குடிப்பதும் மீண்டும் எலும்பை கடிப்பதுமாகவேலை செய்து கொண்டிருந்த்து உன்மையில் இரத்தம் எலும்பிலிருந்து வரவில்லை,தன்வாயினின்றே வருகிறது என்பதை அந்த நாய் உணரவில்லை.

இதுபோலவே,மனிதன் வெளிப் பொருள்களை அனுபவிக்கும் போது தன்னுள்ளுள்ள சுகத்தையே சிறிது பெருகிறான் ஆனால் அறியாமையால், அப் பொருள்களிலிருந்தே சுகம் வருவதாக்க் கருதுகிறான்! கதையிற் கண்ட நாயைப் போல நடந்துகொள்கிறான் அதனால், மீண்டும் மீண்டும் எலும்பையே கடித்த நாயைப் போல மீண்டும் மீண்டும் வெளிப் பொருள்களைத் தேடுவதிலேயே அதற்காக உழைப்பதிலேயே, வாழ்நாள் முழுவதையும் செலவிடுகிறான்!. அந்தோ! அதன் பயனாக என்ன விளைகிறது ? கணக்கற்ற

துன்பக் குவியலும், பகைவுணர்வுகளுமே மிச்சம்!, இதுவே அறியாமை அல்லது மாயை,!!

உலக சரித்திரம் கூறுகின்ற கற்கால மனிதர்களிலிருந்து தற்கால அணு வாராய்ச்சியாளர்கள் வரை உண்டான மனித சமூகம்.அறிவுத்துறையில் ஆராய்ந்தாராய்ந்து உழைத்த பாடுக ளெல்லாம்,திரும்பத் திரும்ப எலும்பைக் கடித்த நாயின் முயற்சியே யாயிற் றல்லவா ஓளிக்காமல் சொல்லப்பட்டால் உண்மை இதுவே ஏனெனில் வெளிப் பொருள்களாகின்ற பஞ்சேந்திரிய சுக சாதனங்களைத் திரட்டுவதைத் தவிர இன்று உலகிற் காணப்படும் முன்னேற்றம் வெறென்ன நிகழ்திருக்கிறது சொல் உலகின் இத்தனை வித முயற்சிகளுக்கும் அடிப்படைக் கருத்தாவது சுகம் வெளிப் பொருள்களிருந்து வருகிறது என்ற தப்புக் கொள்கையே தான் வேறொன்று மில்லை எலும்பிலிருந்துதான் இரத்தம் வருகிறது என்ற எண்ணிய நாய்க்கும் இகத்தின் பாக்கியங்களாகிய வெளிப் பொருள்களைப் பெருக்கிக் குவிக்கும் நவீன பௌதிக விஞ்ஞான ஆராய்ட்சி முன்னேற்றத் தால்தான் உலகம் சுகமடையும் என்று எண்ணுகின்ற மனிதனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறு சொல் ஓன்றுமேயில்லை யன்றோ.

முறையிடு

பதிவு#18
Hrai Chandran எழுதியது 04 ஜனவரி 2010 அன்று, 09:20 மணிக்கு
ஐயா இது ஒரு கதை அவ்வளவுதான்,,

தன்னிலையோ அறியாமல் முன்னிலை,படற்கையே அறிவது மாயே,அறியாமை,
தன்னிலையே அறிந்து முன்னிலை,படற்கையே அறிவது பூரண அறிவு,இதை விழக்க பிறதி ஒன்று தேவையில்லை,

ஒரு கேள்விமட்டும்,,நம் இருப்பு நிலையே விழக்க எது தேவை,,

முறையிடு

பதிவு#19
நீங்கள் எழுதியது04 ஜனவரி 2010 அன்று, 10:05 மணிக்கு
மனதால் தானை தண்டுவடத்தை உணர்கின்றோம்,அந்த மனம் கொண்டு நம்மை எப்படி உணரமுடியும்,ஒரு மையம் என்று சொல்லும் போது அது விரிய ஒரு இடம் வோண்டும் அல்லவா,இது இருபடி மூலம் அல்லவா,தன்னிலை ஆகாதன்றோ.தன்னிலை தானே நான் யார் என்பதன் விழக்கம்,


pathil: நமது இருப்பு உண்ர்வின் மையபிரதேசம் என்பது , நமது உணர்வின் மைய்ய இடம் என்னும் பொருளில் கூறி இருக்கிறேன்.
அதற்க்கு எல்லை என்று சொன்னால் எல்லையே இல்லாத தன்மையைத்தான் சொல்லமுடியும். இருப்புநிலைக்கு எல்லையே இல்லை. நமது உயிரே அந்த எல்லையற்ற தன்மையைத்தான் விரும்புகிறது. நமது மனதுக்கு வேண்டுமானால் எல்லை இருக்கலாம். மனது அதன் எல்லையை தாண்டினால் , அவனை பைத்தியம் என்று சொல்கிறார்கள். மனதிற்கு ஓர் ஒழுங்கு அமைவு உண்டு. எந்த கட்டுப்பாடும், எல்லைகளும் அற்றது நமது உயிர்ப்பு தன்மை. பரிபூர்ண விகாஸ தன்மையுடையது நமது உயிர்த்தன்மை. அதன் இயல்பே எல்லையற்ற தன்மைதான். அந்த தன்மையை அடையவே தவிக்கிறது.

இல்லாத ஒன்றை ஒரு மையமாக எப்படி குறிப்பிட முடியும்,.............ஹரியின் கேள்வி

மையம் என சொல்லியிருப்பது ஒரு அடையாளத்துக்கு தான். எல்லைகளே இல்லாததுக்கு எது மையம்?
நான் இருக்கிறேன்-- என நினைக்கும் மனதுக்கு சொன்னது அது.

,மனதால் தானை தண்டுவடத்தை உணர்கின்றோம்,அந்த மனம் கொண்டு நம்மை எப்படி உணரமுடியும்: ஹரியின் கேள்வி
தண்டு வடம் என்றால் மனத்தால் அறிகிறோம். ஆனால் தண்டுவட மைய்ய உணர்வு கொண்டு அனைத்தையும் அறிகிறோம்.

ஒரு மையம் என்று சொல்லும் போது அது விரிய ஒரு இடம் வோண்டும் அல்லவா,இது இருபடி மூலம் அல்லவா,தன்னிலை ஆகாதன்றோ.தன்னிலை தானே நான் யார் என்பதன் விழக்கம்,: ஹரியின் கேள்வி

மீண்டும் கூறுவது மையம் என்ற சொல் இந்த உடல்தான் நான் என நினைக்கும் மனித மனத்திற்கு சொல்லப்பட்டது. .................................இங்கிருந்து வரும் பதில் சில சமயம் மனதின் எல்லையிலிருந்து வரலால், சில சமயம் இருப்பின் உணர்விலிருந்தும் வரலாம். உதாரணம்: செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே. சாமி தேன் வந்து காதினில் பாய்ந்தால்
எப்படி இருக்கும்.? இது மொழிகளுக்கு உண்டான பிரச்னை. சொல்லப்பட்ட கருத்தை கவனிப்போம்.

கருத்தை அழிக்க

Post deleted on 04 ஜனவரி 2010 at 13:57
பதிவு#21
நீங்கள் எழுதியது05 ஜனவரி 2010 அன்று, 09:23 மணிக்கு
ஒரு கேள்விமட்டும்,,நம் இருப்பு நிலையே விழக்க எது தேவை,,?

pathil: நமது இருப்பு நிலையை நாம் அறிவதற்கு , உண்மையைப்பற்றி பூர்ண தெளிவு வேண்டும். மயக்கம் இருக்ககூடாது.
சதா காலமும், அந்த உண்மைநிலை விழிப்புடன் இருக்கவேண்டும். உடம்பை நன்கு பழக்கி வைக்க வேண்டும். நாம் பெரும்பாலும் உடல் வேறு, மனம் வேறு என எண்ணி வாழ்கிறோம். உடல் என்பது ஸ்தூலம், மனம் என்பது சூட்சுமம். பொருளாக உடலும், அலையாக மனமும் உள்ளது. மகான் ரஜனீஷ் சொல்கிறார்: உடலுக்கு கொடுக்கும் லாகிரி வஸ்துகள் மனதை ஏன் பாதிக்கிறது? மனதை வசியப்படுத்தினால் உடல் ஏன் மரத்து போகிறது? அல்லது உனது வலது கை வெட்டு பட்டு விட்டது உனக்கு வலது கையே இல்லை என ஒருவன் மனதை வசியப்படுத்தினால், அவனது வலது கையில் நீங்கள் எது செய்தாலும் அதை அவன் உணர்வதில்லை. ஆக நமது உடலை அசையாது வைத்தால் தான் மனது அசையாது நிற்கும். மனது அசையாது நின்றால் நமது இருப்புநிலை விழிக்கும்.இன்னும் மூச்சு பயிற்சிகள் நமது முன்னோர்களால் சொல்லப்பட்டிருக்கிறது. அதையும் ஞானமடைந்தவர் முன்னிலையில் கற்றுக்கொள்வது மிக்கநலமாகும்.

Sunday, January 24, 2010

இருபத்தியேழு : காலம் பற்றிய விழிப்புணர்வு


தினமும் காலையில் தியானம் செய்யும் போது .
1, யோகா உடல் பயிற்சி,
2, நாடி சுத்தி- மூச்சு பயிற்சி,
3, ஓம் சாண்டிங்,
4, த்யாநித்தல்

இவைகளை செய்யும்போது நமது உடல் மன இருப்பை,
தண்டு வடத்தின் அடிப்பகுதியில் (மூலாதாரம்) இருத்தி,நிறுத்தி
(மேல் நோக்கி) பயிற்சி செய்தல் வேண்டும்.

நமது உடல்,மனம் இரண்டையும் அசத்திலிருந்து- சத்துக்கும்,
அக்ஞான இருளில் இருந்து- ஒளிக்கும்,
சவத்தன்மையிலிருந்து-உயிர்ப்புக்கும் எடுத்து செல்லுதல் வேண்டும்.

நம் உடல், மனம் முழுமையும், அந்த மூன்று நிலைகளான சத்து,ஒளி,உயிர்தன்மைக்கு மாற வேண்டுமானால்,

,-- ஆறு நிலைகளான அசத்து,சத்து,இருள்,ஒளி,சவம்,உயிர்(ஆறு நிலை)
இவற்றில் (உடலும்,மனமும்) கலந்து நின்றால் ,
நமது பயிற்சிக்கு வெளியே மனம் ஓடிக்கொண்டிருக்கும்.
உடலில் அங்கங்கே வலிதோன்றும்.

உடலையும், மனத்தையும் (மூன்று நிலை நோக்கி)
கவனம் பிசகாமல் தியானித்தல் வேண்டும்.

கவனம் பிசகாமல் என்றால்,

1, யோகா உடல் பயிற்சி இயல்பாகவும்,
உடல் அவயவங்கள் அனைத்தும் செயல் பட்டு பின் ஒய்வு நிலைக்கு வரவேண்டும்.
நல்ல ஒய்வு நிலையில் மட்டுமே இது கை கூடும்.

2, நாடி சுத்தி- மூச்சு பயிற்சி ,
நல்ல ஆழ்ந்த நீடித்த மூச்சு பயிற்சியில் உடலில் உள்ள அனைத்து செல்களும்,
முழு பிராண தன்மைக்கு கொண்டு வருதல் வேண்டும்.
( இது சரிவர செய்தாலே, ஒளித்தன்மையை மனதும், உடலும் உணர முடியும்.)

3, ஓம் சாண்டிங்-
பிரபஞ்ச மூலத்தன்மையான 'ஓம்' நாதம் இயல்பாகவும்,
ஆழ்ந்தும், நீண்டும்- உடலும் மனமும் ஒரு லயத்துக்கு வரும் வரை
செய்தல் வேண்டும்.
இந்த லயமே பின் வரும் தியானித்தலுக்கு,
அஸ்திவாரமாக அமைகிறது.
உடலில் உள்ள அனைத்து அணுக்களும் ஒரே லயத்துக்கு வருதல் அவசியம்.
இந்த ' ஓம் ' என்கிற நாதத்தை தவிர வேறு எதையும் அறியாத நிலை கூடுமானால்
அந்த லயம் உங்களுக்கு சித்தித்து உள்ளது என அர்த்தம்.

4, த்யாநித்தல் ; உங்களின் மூல இருப்பான தண்டு வடத்தில் அடி நுனியில்
-மூலாதாரம்- (மனதையும், இருப்பு உணர்வையும் இருத்தி)
பொருந்தி 'இருந்து',
சின் முத்திரையில் கைகளை வைத்து
புருவ மத்தியான 'ஆக்னா' வை நோக்கி ,
மூன்று நிலைகளான சத்து,ஒளி,உயிரை வைத்து த்யானிக்க,
சத்து,ஒளி,உயிர் மூன்றும் ஒன்றாகி இருப்புநிலையாக மாறி
ஆதி தூய இருப்பு நிலையோடு , உங்கள் இருப்பு நிலையும் கலந்து கூடி ஏகத்துவம் வாய்க்கும்.

உங்கள் மூல இருப்பு உணர்வும், ஆதி மூல தூய இருப்பு உணர்வும் கூடி ஒன்றாக கலத்தல் என்பது
'காலம்' என்பதை உங்களுக்கு உணர்த்தும்.

உபநிஷத்தில் நாம் ஏற்கனவே படித்த....,

-ஒரு மரத்தில் இரண்டு பறவைகள்-

ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் அமர்ந்திருக்கிறது.
இரண்டும் ஒரே சாயலாக இருக்கிறது.
ஓன்று அம்மரத்தின் பழங்களை கொத்தி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது.
மற்றொன்று வெறுமனே நோக்கியவாறு (சாட்சியாக) அமர்ந்திருக்கிறது.

பார்த்துக்கொண்டு இருக்கும் பறவை இயற்க்கைக்கு அப்பால்,
பற்றுகளில் சிக்கிக்கொள்ளாத, ஆத்மாவாக இருக்கிறது.
-- ரிக் வேத பாடல்.

ஒன்று அம்மரத்தின் பழங்களை கொத்தி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த பறவை உங்களது போருள்தன்மையான
அந்த ஆறு நிலைகளில் ( அசத்து,சத்து,இருள்,ஒளி,சவம்,உயிர்) சஞ்சரித்து கொண்டு
அசத்து,இருள்,சவம் எனும் மாயா நிலையான -
நேற்று, நாளை எனும் கற்பனை, அல்லது ஞாபக,
நிலையாகிய மாயா நிலையில் உள்ளது.

( இந்த நிலையே நமக்கு பரிச்சயமான நிலை.)
நாம் மனம் என்று இதையே சொல்லி வந்திருக்கிறோம்.

மற்றொன்று, வெறுமனே நோக்கியவாறு (சாட்சியாக) அமர்ந்திருக்கிறது.
இந்த பறவையே
சத்தான, ஒளியான, உயிர்ப்பான, இருப்பான காலம். இக்கணம்,இக்கணம் .

(இது, நாம் இதுவரை பரிச்சயப்படாதது.)
அந்த 'ஞான நிலை' வாய்க்கும் போதே பரிச்சயப்படுவது.
(வெறுமனே நோக்கியவாறு (சாட்சியாக) அமர்ந்திருக்கிறது- என்பதின் சூட்சுமம், காலம்.)

ஜாக்கிரதை

இதில் எந்த பயிற்சியையும் நீங்களாகவே செய்தல் கூடாது.

இந்த நான்கு பயிற்சியுமே ஒரு ஞாணமடைந்தவரிடமோ,
அல்லது அவரது மேர்பார்வையிலேயோ தான் செய்யப்பட வேண்டும்.

வெறும் புத்தகத்தை படித்து விட்டு யோகா செய்து
பைத்தியம் பிடித்தவர் அநேகர்.

ஜாக்கிரதை.

ஏனெனில்,
உங்களது ஆதி துவக்கமான ஒரு செல் உயிரிலிருந்து
இன்று மனிதனாக பரிணமித்தது வரை உள்ள
உங்கள் இயல்பை ,மாற்றி
இன்று வேறு ஒரு தளத்துக்கு உங்களை எடுத்து செல்வதே
இந்த பயிற்சிகள்.

மிக்க கவனம் தேவை. கவனம், கவனம்.

Friday, January 22, 2010

இருபத்தியாறு : ஓஷோ


திருப்தி, போதும் எனும் உணர்வு ,பூரணத்துவம்
இவை
அதிர்ஷ்ட வசமாக அந்த ஆதாரம் வெளியில் எங்கும் இல்லை.

உங்களுக்குள்ளேயே அது இருக்கிறது.

நீங்கள் த்யானத்தால் அதை கண்டு கொள்ள முடியும்.
உங்களுக்கு நீங்களே போதுமானவராக இருக்கிறீர்கள்
இந்த உணர்வுக்கு, போதும் எனும் உணர்வுக்கு,
நீங்கள் வந்து விட்டதுமே அனுபவித்தல் - அனுபவிப்பதற்கான மனம்
அனுபவிக்கும் மனம்- மறைந்து விடுகிறது .

இருபத்தைந்து : எல்லைக்கு உட்பட்டதும்-எல்லை அற்றதும்.


இந்த உடல் எல்லையுடையது.
உலகில் உள்ள பொருள் யாவும் அது அதற்க்கு ஒரு எல்லையுடன் இருக்கிறது.
சத்து-அசத்து, இருள்-ஒளி, சவம்-உயிர், இந்த ஆறு நிலைகளுடனும்
கலந்து இருப்பது எதுவோ அது எல்லையுடையது.

தூய நிலையான மகாமனத்துக்கு எல்லையே இல்லை.
அந்த மகாமனம் எல்லையற்றது.
நீங்கள் எப்போதாவது எல்லையற்ற ஒன்றை தரிசித்ததுண்டா?
நமது மனமும் எல்லைகளுக்கு உட்பட்டே இது வரை சிந்தித்து வந்துள்ளது.
எல்லைகளுக்கு உட்பட்டு சிந்திப்பதுவே மாயா.
அந்த மனத்தை(அதன் பழக்கம்) எல்லை அற்ற மகாமனத்திடம் சேர்த்தால், - ( ஸ்ரீ ரமண மகரிஷி கருத்தில் சொன்னால், உங்கள் உப்பு கட்டியை (மனம்) அந்த எல்லையற்ற கடலில் (மகாமனம்) கரைத்து விடுங்கள்)-
நீங்கள் வேறு இந்த உலகு வேறு எனும் தற்போதைய,
மாயா எனும் நிலை மாறும்.

Thursday, January 21, 2010

இருபத்துநான்கு : சென்னை செந்திலுடன் ஒரு உரையாடல்.


1,ஒரு மனிதன் எப்பொழுது தான், ஞான உணர்வை அடைய முடியும்? இது உங்கள் கேள்வி.
எந்த மனிதனும் தானே ஞான உணர்வை அடைந்து விடுவதில்லை. ஞான தேடல் உள்ளவர்க்கே
இது சித்திக்கும்.
ஞான தேடலும் அவ்வளவாக யாருக்கும் இருப்பதில்லை.
இந்த வாழ்க்கை மீது சற்றாவது சுரணை உள்ள மனிதருக்கே ஞான தேடல் வருகிறது.
நான் என்பது என்ன? பிறக்கும் முன் எங்கிருந்தேன்? இறந்த பின் எங்கே போகிறேன்? இந்த பூமி, வானம், அண்ட சராசரங்கள், காலம், வெளி, இயக்கம் இதெல்லாம் என்ன?
என் மூலம் என்ன? நான் எங்கிருந்து துவங்கினேன்? இந்த கேள்வி எல்லாம் உங்களுக்கு வந்தால்
உங்களுக்கு ஞான தேடல் இருக்கிறது என கொள்ளலாம். அல்லது,
தினமும் ருசியாக சாப்பிடுவது, நல்ல செக்ஸ் விளையாட்டு, உடம்பை சுகமாக (அதன் பழக்க சுபாவத்தை மீறாமல்) வைத்து கொள்வது , எங்கோ என்னவோ நடந்து விட்டு போகிறது என கவனமின்றி நடந்து கொள்வது, மொத்தத்தில் சோம்பலாக இருப்பது. சுய நலத்தை தவிர வேறு நோக்கமே இல்லாது இருப்பது. .................என்ன செய்வது இப்படி தான் எல்லோரும் இருக்கிறார்கள். அடுத்த கேள்விக்கு தொடர்ந்து பதில் எழுதுகிறேன்.
Reply



2,ஒரு மனிதனுக்கு ஞான தேடல் தீவிரமாக இருந்து,
சதா காலமும் தேடல் தீவிரமாகவும் சிரத்தையுடனும்
இருந்து
ஐம்புல உணர்வை தாண்டி ,
நமது தண்டு வட உணர்வான நமது மைய்ய இருப்பு உணர்வில் நமது கவனத்தை வைத்து,
நமது மனத்தை இந்த இருப்பு உணர்வில் நிலை நிறுத்தி ,
பிரபஞ்ச மைய்ய இருப்பு நிலையோடு ,
நமது மைய்ய இருப்பு நிலையை மனத்தால் பொருத்தி (எல்லோரும் மனத்தை கடந்து என்று சொல்கிறார்கள்) இருத்தி நிறுத்தினால் ,
நமது மைய்ய இருப்பும் பிரபஞ்ச மைய்ய இருப்பும் கலந்து
ஒரே இருப்பாக மாறுவதை காணலாம்.( அப்பொழுது மனம் தன சுய போக்கிலிருந்து மாறி அவனது ஆளுகைக்கு மாறுகிறது)
அந்த நிலையே பரிபூர்ண நிலை.
அதில் லயித்தவர்களுக்கு ஞானம் கிடைக்கிறது.
இதை நடை முறை படுத்துவது என்பது அவ்வளவாக சுலபமில்லை.
ஒரு மனிதனின் தீவிரத்தை பொறுத்தது அது.



3,மனம் என்பது மூன்று வித அடிப்படை கூறுகளில் செயல்படுவதாக தோன்றுகிறது.
சத்து, ஒளி, உயிர் என்பது அந்த மூன்றும்.
பிரபஞ்ச மனமும் இந்த மூலக்கூறுகளிலேயே இயங்குகிறது.
மனம் உடல்(பொருள்) சார்ந்த புலன்களின் வழியே செயல்படும் போது
சத்து-அசத்து., இருள்-ஒளி,. சவம்-உயிர்.
இந்த ஆறு நிலைகளில் கலந்து இயங்குகிறது.
பிரபஞ்ச மன உணர்வும் பொருள் தன்மையில் இயங்கு நிலையில்
இந்த ஆறு நிலைகளில் கலந்து இயங்குகிறது.
இந்த அசத்து, இருள், சவத்தன்மை, நிழல் போன்றது. (இதுவே மாயா).
நாம் தியானம் செய்ய துவங்கும்போது ஒரு மந்திரத்தை சொல்லச்சொல்லி ஞானமடைந்தவர்கள் சிபாரிசு செய்கிறார்கள்.
ப்ருஹ தாரன்ய கோபநிசத்தில் இந்த மந்திரம் சொல்லப்பட்டு இருக்கிறது.

அஸத் தோமா ஸத் கமய -
தமஸ் ஸோமா ஜ்யோதிர்கமய -
ம்ருத்யோர்மா அம்ருதங்கமய .


அஸத் திலிருந்து என்னை ஸத்துக்கு அழைத்துச்செல்;

அக்ஞான இருளிலிருந்து என்னை ஞான ஒளிக்கு அழைத்துச்செல்;

சாவுத்தன்மையிலிருந்து என்னை சாகாத தன்மையான ஞானத்துக்கு அழைத்துச்செல்.

இந்த கோரிக்கையை இந்த உடலில் இயங்கும் மனம், பிரபஞ்ச மனதிடம் யாசிக்கிறது. ......தொடரும்.



4,நண்பரே,
நீங்கள், நான், இந்த உலகு,
அந்த வானம், அண்ட சராசரம், சூரிய குடும்பம், பால்வீதி மண்டலம், எல்லாமே மனம் தான். மகாமனம்.
அந்த மகாமனத்தின் ஒரு துளிதான் நீங்கள்,மற்றும் நானும்.
நம்மால் பொருள்(உடல்,மற்றும் புலன்கள்) சார்ந்து எண்ணமிட முடிகிறது.
அந்த எண்ணமே 'நான்' என்று எண்ண தொகுப்பு ஆகிறது.
நாம் தூய நிலைக்கு போக விரும்பினால்,
அங்கு அசத்து, இருள், சவத்தன்மை கிடையாது.
அங்கு சத்து, ஒளி, உயிர் என ஆதி இருப்பு நிலையேஉள்ளது.

Tuesday, January 19, 2010

இருபத்துமூன்று : ஸ்ரீ ராம கிருஷ்ணரின் இறை அநுபூதி.


ஸ்ரீ ராமகிருஷ்ணர் தன்னுடைய இறை அனுபூதியை
சீடர்களுக்கு பின் வருமாறு கூறியுள்ளார்.
"பரம்பொருளின் காட்சி கிட்டிய பொழுது
வீடு, கதவு, கோயில் அனைத்துமே மறைந்து விட்டன.
எங்கும் எதுவுமே இல்லாதது போல் தோன்றியது.
எங்கும் எல்லையற்று ஒளி பரவி இருக்க கண்டேன்.
எங்கு நோக்கினாலும் ஒளி வெள்ளம்.
எல்லா திசை களிலிருந்தும் ஒளி,
மிக்க வேகத்துடன் என்னை சூழ்ந்து கொண்டு ,
எல்லையற்ற பரம்பொருளில் ஆழ்த்தியது .
ஒளி வெள்ளத்தில் மூழ்கி திணறி வெளி உணர்வை இழந்து விட்டேன்.
வெளி உலகில் என்ன நிகழ்கிறது என்பதே தெரியவில்லை.
அன்றைய தினமும் , மறு நாளும் எவ்வாறு கழிந்தன என்பது தெரியாது.
ஆனால்,
என் உள்ளத்தில் அளப்பரிய ஆனந்தம் பொங்கி ததும்பியது.

இருபத்தியிரண்டு : ஞானம்


புத்தருக்கு
என்றைய தினம் ஞானம் ஏற்ப்பட்டதோ அன்று,
மக்கள் அவரிடம் வந்து 'உங்களுக்கு என்ன கிடைத்தது?' என்று கேட்டனர்.
அவர்;
"அதைகேட்காதீர்கள் நான் எதை இழந்தேன் என்று கேளுங்கள்". என்றார்.
அவர்கள் புத்திக்கு அது எட்டவில்லை.
"எங்களுக்கு விளக்கமாக கூறுங்கள்!" என்றனர்.
புத்தர்: எனக்கு கிடைத்ததே இருந்ததைத்தான் அடைந்தேன்.
எது, என்னிடம் இல்லாதபோதும் இருப்பதாக நம்பிக்கொண்டு இருந்தேனோ ,
அதையே இழந்தேன் .
எது இருக்க வில்லையோ அதை இழந்தேன்:
எது இருந்ததோ ,அதை அடைந்து விட்டேன். என்றார்.

இருபத்தியொன்று :அருட்பிரகாசம்.


நமது நாபி முதல் புருவ மத்தி ஈறாக ஒரு நாடி இருக்கின்றது.

அந்த நாடி நுனியில் புருவ மத்தியில் ஓர் சவ்வு தொங்குகிறது.

அதன் அடிப்புறம் வெண்மை,

மேற்புறம் மஞ்சள்.

அச்சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறுவதும், இறங்குவதும்
அனுபவத்தால் விளங்கும்.

அகமாகிய ஆன்ம பிரகாசமே ஞான சபை.

அந்த பிரகாசத்துக்குள்ளிருக்கும் பிரகாசமே கடவுள்.

அந்த உள்ளொளியின் அசைவே ஞானாகாச நடனம்.

இருபது : வள்ளலாரின் வாக்கு.


அருவான பிரம்மத்தை அறிவோர் அறிக:

உருவாக அன்பு செய்வோர் அன்பு செய்க.

சுத்த பிரம்மம் உரை மனத்திற்கு எட்டாத பூர்ணம்.

மனோலயமான பின்பே பிரம்மானுபவம் எய்தும்.

மனம் சிறிது கிளம்பினாலும் ஆத்மா ஞானம் விளங்காது.

பிரம்மத்தை ஆத்மா ஞானத்தாலே அறியலாம்.

Monday, January 18, 2010

பத்தொன்பது : உபநிஷத்.


அஸத் தோமா ஸத் கமய -
தமஸ் ஸோமா ஜ்யோதிர்கமய -
ம்ருத்யோர்மா அம்ருதங்கமய .


1,அஸத் திலிருந்து என்னை ஸத்துக்கு அழைத்துச்செல்;

2,அக்ஞான இருளிலிருந்து என்னை ஞான ஒளிக்கு அழைத்துச்செல்;

3, சாவுத்தன்மையிலிருந்து என்னை சாகாத தன்மையான ஞானத்துக்கு அழைத்துச்செல்.
----ப்ருஹ தாரன்ய கோபநிசத்.

Sunday, January 17, 2010

பதினெட்டு : யோனி


தாவர யோனி வழியே வந்து ,
ஊர்வன,
நீந்துவன,
பறப்பன,
ஆகியவற்றின் யோனி வழியே வந்து,
தேவ யோனி வர்க்கங்களான
பூதர்,
இராட்சசர் ,
அசுரர்
முதலியோர் யோனி வழியே கடந்து வந்து
மனித யோனியில்
ஒருவனது சுக்கிலத்துளியின் கண் ஒரு பகுதியில்
பேரணு உருவில்
வெளிப்பட்டு -

எத்தனை யோனிக்குள் புகுந்து,
புகுந்து
வெளிப்பட்டு மனிதப்பிறவி என்பதே கறைப்படுத்தப்பட்ட
பிறவி ஆயிற்றே என்று
வருந்திய ஞான சித்தர் ராமலிங்க அடிகள்
'இறந்திறந்தே இளைத்ததெல்லாம் போதும் இந்த உடம்பு'
என்று கண்ணீர் சொரிய பாடுகின்றார்.

பதினேழு : நிர்வாணா.


விளக்கை அணைத்து விட்டால்

ஏற்படுவது போன்ற

ஒன்றுமற்ற

சூன்யமான

ஒரு நிலை தான் நிருவாணம்.

என்கிறது ஹீனயான தத்துவம்.

நிர்வாணம் என்பது சூன்யம் அல்ல .

நிலையற்ற

இந்த பிரபஞ்சம் அனைத்துக்கும்

மூலாதாரமாயுள்ள

ஒரு உயர்ந்த நிலை என்கிறது

மகாயான தத்துவம்.

Saturday, January 16, 2010

பதினாறு : திகம்பர மகாவீரர்.


மகா சித்தரான ஸ்ரீ வர்த்தமான மகாவீரர் திகம்பர நிலை அடைவதற்கு ஒரு தத்துவார்த்த நிகழ்வே உந்துதலாக இருந்தது.
அன்று மார்கழி மாதத்து கிருஷ்ண பட்ச தசமி திதி.
இந்திரன் கொடுத்த தெய்வீக ஆடை மட்டுமே உடுத்தி தவம் செய்து வந்த
வர்த்தமானரிடம் சோமதத்தன் எனும் பிராமணன் தேடி வந்தான். தானம் வேண்டும் என்று இறைஞ்சினான்.
மகாவீரரிடமோ இடுப்பிலிருந்த இந்திரன் உடையைத்தவிர வேறு இல்லை. ஆயினும் எதுவும் இல்லை என்று கூற விரும்பாது அந்த ஆடையின் ஒரு பகுதியை கிழித்து கொடுத்தார் அவர்.

அதனை பெற்றுக்கொண்டு சென்று சோமதத்தன் ஒரு வியாபாரியிடம் அதற்க்கு பொருள் கேட்டான்.
தேவேந்திர உடையின் மகத்துவம் கண்ட வியாபாரி அந்த உடையின் மறு பாதியையும் கொண்டு வந்து கொடுத்தால் முன்னூறு தங்க காசுதருவதாக கூறினான்.

சோமதத்தன் மகாவீரரிடம் திரும்பி வந்து கேட்ட போது , மகாவீரர் தான் அணிந்திருந்த சிறு உடை மீதான பற்றையும் விட்டு விட்டார்.
அந்த ஆடையையும் கழற்றி கொடுத்து விட்டார். எந்த விதமான உடையுமே தீங்கு தான் பயக்கும் என்று அன்று முதல் திகம்பரரானார் மகாவீரர்.

கையில் திருவோடோ, ஏக தண்டமோ, திரிதண்டாமோ, எதுவும் அவர் வைத்திருக்கவில்லை.

அவர் உடல் முழுவதும் பூச்சிகள் ஊர்ந்தன, பூச்சிகள் அவர் உடலை கடித்தும் துன்புறுத்தின.
அவருடைய நிருவாண தோற்றம் கண்டு ஊராரும் அடித்து துன்புறுத்தினர். எல்லாவற்றையும் அவர் பொறுத்துக்கொண்டார்

நாட்கணக்கில் ,வாரக்கணக்கில், மாதக்கணக்கில் பசியும், பட்டினியுமாக இதே நிலை.

கண்ணையோ , உடம்பையோ தொட்டு சொறிந்தால் அதில் ஊரும் ஜீவன்கள் இறந்து விடுமோ என்று அஞ்சி பேசாமல் இருந்து விடுவார்.

சண்ட கௌசிகன் என்ற கொடிய நாகம் ஒரு நாள் வெகு தூரத்திலிருந்தே சீரும் சப்தம் கேட்டது. மகாவீரர் துளியும் அஞ்சாது நின்றார். கொடிய விஷம் பாய்ச்சி அது சினத்தோடு அவருடைய கட்டை விரலைக்கடித்தது.

'தம்பி சண்ட கௌசிகா!' 'உன் விஷம் என்னை ஒன்றும் செய்யாது. நான் சாக மாட்டேன். உன் காரியத்தால் தீவினை தான் பெருகும் .
உன் ஆத்மாவை கவனி . சக ஜீவா ராசிகளிடத்து அன்பு செய்' என்று அவர் கூறியதும் அந்த கொடிய விஷ நாகம், தலை கவிழ்ந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தது.

Friday, January 15, 2010

பதினைந்து : இராமலிங்க அடிகளார்.


அடிகள் ஆவியோடியைந்த யாக்கையுடன் மறைந்த
அந்த புனித நேரம் 1874ஆம் ஆண்டு ஜனவரி30ஆம் நாள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பன்னிரண்டு மணியாகும்.
மனித பிறவி எடுத்துவிட்ட எவரும் உடலோடு மறைவது சாத்தியமா?
பிறந்தவர் யாவரும் இறப்பது உறுதி என்பது தானே பெரியோர் வாக்கு.
அடிகளார் உடலோடு மறைந்தார் என்பது உண்மையாக இருக்க முடியுமா என்று பலரும் ஐயுற்றனர்.
உலக நியதிக்கு மாறாக பருவுடலோடு வள்ளலார் மறைந்து விட்டார்
என்ற செய்தியே
வள்ளலார் ஒரு சித்த புருஷர் என்பதை நமக்கு வலியுறுத்துகிறது.
அவரது முடிவைப்பற்றிய உண்மையை உணர வெறும் அறிவு மட்டுமே போதாது.

"என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் என்று பாடியவர் வள்ளலார்.
வள்ளலார் கூறும்போது சன்மார்க்கத்தின் முடிவு சாகாத கல்வியை தெரிவிப்பதே அன்றி வேறில்லை.
சாகின்றவன் சன்மார்க்க நிலையை பெற்றவனல்லன். சாகாதவனே சன்மார்க்கி". என்று வலியுறுத்துகிறார்.

Saturday, January 9, 2010

பதினான்கு : எண்ணிலடங்கா மதங்கள்.


உலகில் இன்று நிலவி வரும் பதற்றங்களுக்கும்,
தீவிர வாதத்திற்கும் , இனப்படு கொலைகளுக்கும் ,
பொருளாதார சுரண்டல்களுக்கும் பின்னணியில் , காண கிடைக்காமல் ஒளிந்து கொண்டிருப்பது மத உணர்வுகளே!.

இது வரை மண்ணில் தோன்றி ஞானநிலை நிலை அடைந்த மகான்கள் அனைவருமே கண்டது ஒன்றை தான்.

அதுவே இறுதி நிலை சத்தியம். அதற்க்கு மேலுமோ, அப்பாலுமோ பிரிதொன்று இல்லை. இதை அனைவருமே கூறியுள்ளனர்.

நிலைமை இப்படி இருக்க, எண்ணிலடங்கா மதங்கள் தோன்ற காரணம் என்ன?

மூல சத்தியமான -பரபிரம்மம்-தூய இருப்புநிலை-இறைநிலை- இன்னபிற -இதை தவிர மற்ற அனைத்தும் மாயையே. ( மாயை: நிலையற்ற தோன்றி மறையக்கூடியது.) இதுவும் அனைத்து ஞானியரும் கூறியது தான்.

மதங்கள் அனைத்துமே இந்த மாயை எனும் நிழலால்தான் கட்டப்பட்டு இருக்கின்றன. இந்த உண்மை நிலை ஞானமடைந்த ஞாநியர்களுக்கு தெரியாமலா போனது?

ஞாநியர்களுக்கு தெரிந்தே இருந்த்தது என்றால் ஏன் இந்த உண்மையை உலகுக்கு பிரகடனம் செய்யவில்லை?

அவர்களை தடுத்தது எது?

இன்னும் சில மதங்களில் கடவுள் எனும் மாய நிழலால் மதங்களை நிலை நிறுத்தி உள்ளனர்.
..........................மீண்டும் இது பற்றி பேசுவோம்.

Saturday, January 2, 2010

பதிமூன்று : வேடிக்கை 2

உனது வலது கரத்தை தூக்கி அதில் உள்ள பெரு விரலையோ , ஆட்காட்டி விரலையோ, நீட்டவோ, மடக்கவோ, சொடுக்கவோ முடிகிற மாதிரி--

உனது கண்களை மூடவோ,திறக்கவோ,உருட்டவோ, உன்னித்து பார்க்கவோ முடிகிற மாதிரி--

உனது நாவை மடிக்கவோ,புரட்டவோ, ருசி பார்க்கவோ முடிகிற மாதிரி--

உன்னை சுற்றி எவ்வளவோ சப்தங்கள் கேட்டாலும், ஏதோ ஒரு சப்தத்தை மட்டும் பிரித்து உணர்ந்து பார்க்கிற உனது காது மாதிரி--

உன் வீட்டு சாம்பாரில் மணப்பது அதில் உள்ள பச்சை மிளகாயா? கறிவேப்பிலையா? கடுகா? என பிரித்து பார்க்கும்
உனது மூக்கு மாதிரி--

உனது ஆறாவது புலன் ஆன-தூய இருப்பு நிலையை உணரும் -அறிவையும் சுலபமாக உணர முடியும்.

என்ன---
மேற்கண்ட ஐந்து புலன்களையும் அறிந்து அதை பழக்கி வைத்துள்ளோம்.
ஆறாவது புலனை அறியாமல் விட்டு வைத்திருக்கிறோம்.
இனியாவது

ஆறாவது புலனை சிறுக,சிறுக அறிய முயல்வோம்.

பன்னிரண்டு : வேடிக்கை 1

நீ இங்கு வந்திருக்கிறாய்!

உனது உடல் ஆரோக்கியம்

உன் சுற்றத்தில் நீ உருவாக்கி உள்ள உன் இமேஜ்

உன் மனைவி( அல்லது கணவன்)

உன் தாய்

உன் தகப்பன்

உன் குழந்தைகள்

உன் குடும்ப அமைப்பு

உன் பங்காளிகள்

உனது உறவினர்கள்

உனது ஜாதி--ஜாதிய அமைப்பு

உனது மதம்--மத அமைப்பு

உனது மொழி

உனது இனம்

நீ உறுப்பினராக உள்ள கட்சி

உனது நாடு

உனது தொழில்

நீ பாதுகாப்பாக நீடித்து உயிர் வாழ்வதற்கான -உன்னைப்போன்ற உனது முன்னோர்கள் கண்ட ஏற்பாடு- அதை திறம்பட
அமைத்துக்கொண்டு விட்டாய்.

உனக்கு அடுத்தவேளை சாப்பாட்டுக்கு கவலையில்லை.

இன்னும் ஒரு வருட உணவுக்கு பஞ்சமில்லை.

ஏன்--

உன் ஆயுளுக்கும் உணவு பஞ்சமே வராமல் ஏற்ப்பாடுகள் செய்து இருக்கிறாய்.

அது மட்டுமா?

உன் வாரிசுகளின் ஆயுத காலத்திற்கும் , அவர்களுக்கும் உணவு தட்டுப்பாடே ஏற்படாத வகையில் சொத்துக்களை
சேர்த்து இருக்கிறாய். ( உனது கனவிலும், கற்பனையிலும் உள்ள உனது வாரிசுகளுக்கும் கூட) .

ஆனால்

நீ

நீ

வந்த வேலையை மறந்து விட்டாய்.