Thursday, January 21, 2010

இருபத்துநான்கு : சென்னை செந்திலுடன் ஒரு உரையாடல்.


1,ஒரு மனிதன் எப்பொழுது தான், ஞான உணர்வை அடைய முடியும்? இது உங்கள் கேள்வி.
எந்த மனிதனும் தானே ஞான உணர்வை அடைந்து விடுவதில்லை. ஞான தேடல் உள்ளவர்க்கே
இது சித்திக்கும்.
ஞான தேடலும் அவ்வளவாக யாருக்கும் இருப்பதில்லை.
இந்த வாழ்க்கை மீது சற்றாவது சுரணை உள்ள மனிதருக்கே ஞான தேடல் வருகிறது.
நான் என்பது என்ன? பிறக்கும் முன் எங்கிருந்தேன்? இறந்த பின் எங்கே போகிறேன்? இந்த பூமி, வானம், அண்ட சராசரங்கள், காலம், வெளி, இயக்கம் இதெல்லாம் என்ன?
என் மூலம் என்ன? நான் எங்கிருந்து துவங்கினேன்? இந்த கேள்வி எல்லாம் உங்களுக்கு வந்தால்
உங்களுக்கு ஞான தேடல் இருக்கிறது என கொள்ளலாம். அல்லது,
தினமும் ருசியாக சாப்பிடுவது, நல்ல செக்ஸ் விளையாட்டு, உடம்பை சுகமாக (அதன் பழக்க சுபாவத்தை மீறாமல்) வைத்து கொள்வது , எங்கோ என்னவோ நடந்து விட்டு போகிறது என கவனமின்றி நடந்து கொள்வது, மொத்தத்தில் சோம்பலாக இருப்பது. சுய நலத்தை தவிர வேறு நோக்கமே இல்லாது இருப்பது. .................என்ன செய்வது இப்படி தான் எல்லோரும் இருக்கிறார்கள். அடுத்த கேள்விக்கு தொடர்ந்து பதில் எழுதுகிறேன்.
Reply



2,ஒரு மனிதனுக்கு ஞான தேடல் தீவிரமாக இருந்து,
சதா காலமும் தேடல் தீவிரமாகவும் சிரத்தையுடனும்
இருந்து
ஐம்புல உணர்வை தாண்டி ,
நமது தண்டு வட உணர்வான நமது மைய்ய இருப்பு உணர்வில் நமது கவனத்தை வைத்து,
நமது மனத்தை இந்த இருப்பு உணர்வில் நிலை நிறுத்தி ,
பிரபஞ்ச மைய்ய இருப்பு நிலையோடு ,
நமது மைய்ய இருப்பு நிலையை மனத்தால் பொருத்தி (எல்லோரும் மனத்தை கடந்து என்று சொல்கிறார்கள்) இருத்தி நிறுத்தினால் ,
நமது மைய்ய இருப்பும் பிரபஞ்ச மைய்ய இருப்பும் கலந்து
ஒரே இருப்பாக மாறுவதை காணலாம்.( அப்பொழுது மனம் தன சுய போக்கிலிருந்து மாறி அவனது ஆளுகைக்கு மாறுகிறது)
அந்த நிலையே பரிபூர்ண நிலை.
அதில் லயித்தவர்களுக்கு ஞானம் கிடைக்கிறது.
இதை நடை முறை படுத்துவது என்பது அவ்வளவாக சுலபமில்லை.
ஒரு மனிதனின் தீவிரத்தை பொறுத்தது அது.



3,மனம் என்பது மூன்று வித அடிப்படை கூறுகளில் செயல்படுவதாக தோன்றுகிறது.
சத்து, ஒளி, உயிர் என்பது அந்த மூன்றும்.
பிரபஞ்ச மனமும் இந்த மூலக்கூறுகளிலேயே இயங்குகிறது.
மனம் உடல்(பொருள்) சார்ந்த புலன்களின் வழியே செயல்படும் போது
சத்து-அசத்து., இருள்-ஒளி,. சவம்-உயிர்.
இந்த ஆறு நிலைகளில் கலந்து இயங்குகிறது.
பிரபஞ்ச மன உணர்வும் பொருள் தன்மையில் இயங்கு நிலையில்
இந்த ஆறு நிலைகளில் கலந்து இயங்குகிறது.
இந்த அசத்து, இருள், சவத்தன்மை, நிழல் போன்றது. (இதுவே மாயா).
நாம் தியானம் செய்ய துவங்கும்போது ஒரு மந்திரத்தை சொல்லச்சொல்லி ஞானமடைந்தவர்கள் சிபாரிசு செய்கிறார்கள்.
ப்ருஹ தாரன்ய கோபநிசத்தில் இந்த மந்திரம் சொல்லப்பட்டு இருக்கிறது.

அஸத் தோமா ஸத் கமய -
தமஸ் ஸோமா ஜ்யோதிர்கமய -
ம்ருத்யோர்மா அம்ருதங்கமய .


அஸத் திலிருந்து என்னை ஸத்துக்கு அழைத்துச்செல்;

அக்ஞான இருளிலிருந்து என்னை ஞான ஒளிக்கு அழைத்துச்செல்;

சாவுத்தன்மையிலிருந்து என்னை சாகாத தன்மையான ஞானத்துக்கு அழைத்துச்செல்.

இந்த கோரிக்கையை இந்த உடலில் இயங்கும் மனம், பிரபஞ்ச மனதிடம் யாசிக்கிறது. ......தொடரும்.



4,நண்பரே,
நீங்கள், நான், இந்த உலகு,
அந்த வானம், அண்ட சராசரம், சூரிய குடும்பம், பால்வீதி மண்டலம், எல்லாமே மனம் தான். மகாமனம்.
அந்த மகாமனத்தின் ஒரு துளிதான் நீங்கள்,மற்றும் நானும்.
நம்மால் பொருள்(உடல்,மற்றும் புலன்கள்) சார்ந்து எண்ணமிட முடிகிறது.
அந்த எண்ணமே 'நான்' என்று எண்ண தொகுப்பு ஆகிறது.
நாம் தூய நிலைக்கு போக விரும்பினால்,
அங்கு அசத்து, இருள், சவத்தன்மை கிடையாது.
அங்கு சத்து, ஒளி, உயிர் என ஆதி இருப்பு நிலையேஉள்ளது.

No comments:

Post a Comment