Sunday, January 24, 2010

இருபத்தியேழு : காலம் பற்றிய விழிப்புணர்வு


தினமும் காலையில் தியானம் செய்யும் போது .
1, யோகா உடல் பயிற்சி,
2, நாடி சுத்தி- மூச்சு பயிற்சி,
3, ஓம் சாண்டிங்,
4, த்யாநித்தல்

இவைகளை செய்யும்போது நமது உடல் மன இருப்பை,
தண்டு வடத்தின் அடிப்பகுதியில் (மூலாதாரம்) இருத்தி,நிறுத்தி
(மேல் நோக்கி) பயிற்சி செய்தல் வேண்டும்.

நமது உடல்,மனம் இரண்டையும் அசத்திலிருந்து- சத்துக்கும்,
அக்ஞான இருளில் இருந்து- ஒளிக்கும்,
சவத்தன்மையிலிருந்து-உயிர்ப்புக்கும் எடுத்து செல்லுதல் வேண்டும்.

நம் உடல், மனம் முழுமையும், அந்த மூன்று நிலைகளான சத்து,ஒளி,உயிர்தன்மைக்கு மாற வேண்டுமானால்,

,-- ஆறு நிலைகளான அசத்து,சத்து,இருள்,ஒளி,சவம்,உயிர்(ஆறு நிலை)
இவற்றில் (உடலும்,மனமும்) கலந்து நின்றால் ,
நமது பயிற்சிக்கு வெளியே மனம் ஓடிக்கொண்டிருக்கும்.
உடலில் அங்கங்கே வலிதோன்றும்.

உடலையும், மனத்தையும் (மூன்று நிலை நோக்கி)
கவனம் பிசகாமல் தியானித்தல் வேண்டும்.

கவனம் பிசகாமல் என்றால்,

1, யோகா உடல் பயிற்சி இயல்பாகவும்,
உடல் அவயவங்கள் அனைத்தும் செயல் பட்டு பின் ஒய்வு நிலைக்கு வரவேண்டும்.
நல்ல ஒய்வு நிலையில் மட்டுமே இது கை கூடும்.

2, நாடி சுத்தி- மூச்சு பயிற்சி ,
நல்ல ஆழ்ந்த நீடித்த மூச்சு பயிற்சியில் உடலில் உள்ள அனைத்து செல்களும்,
முழு பிராண தன்மைக்கு கொண்டு வருதல் வேண்டும்.
( இது சரிவர செய்தாலே, ஒளித்தன்மையை மனதும், உடலும் உணர முடியும்.)

3, ஓம் சாண்டிங்-
பிரபஞ்ச மூலத்தன்மையான 'ஓம்' நாதம் இயல்பாகவும்,
ஆழ்ந்தும், நீண்டும்- உடலும் மனமும் ஒரு லயத்துக்கு வரும் வரை
செய்தல் வேண்டும்.
இந்த லயமே பின் வரும் தியானித்தலுக்கு,
அஸ்திவாரமாக அமைகிறது.
உடலில் உள்ள அனைத்து அணுக்களும் ஒரே லயத்துக்கு வருதல் அவசியம்.
இந்த ' ஓம் ' என்கிற நாதத்தை தவிர வேறு எதையும் அறியாத நிலை கூடுமானால்
அந்த லயம் உங்களுக்கு சித்தித்து உள்ளது என அர்த்தம்.

4, த்யாநித்தல் ; உங்களின் மூல இருப்பான தண்டு வடத்தில் அடி நுனியில்
-மூலாதாரம்- (மனதையும், இருப்பு உணர்வையும் இருத்தி)
பொருந்தி 'இருந்து',
சின் முத்திரையில் கைகளை வைத்து
புருவ மத்தியான 'ஆக்னா' வை நோக்கி ,
மூன்று நிலைகளான சத்து,ஒளி,உயிரை வைத்து த்யானிக்க,
சத்து,ஒளி,உயிர் மூன்றும் ஒன்றாகி இருப்புநிலையாக மாறி
ஆதி தூய இருப்பு நிலையோடு , உங்கள் இருப்பு நிலையும் கலந்து கூடி ஏகத்துவம் வாய்க்கும்.

உங்கள் மூல இருப்பு உணர்வும், ஆதி மூல தூய இருப்பு உணர்வும் கூடி ஒன்றாக கலத்தல் என்பது
'காலம்' என்பதை உங்களுக்கு உணர்த்தும்.

உபநிஷத்தில் நாம் ஏற்கனவே படித்த....,

-ஒரு மரத்தில் இரண்டு பறவைகள்-

ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் அமர்ந்திருக்கிறது.
இரண்டும் ஒரே சாயலாக இருக்கிறது.
ஓன்று அம்மரத்தின் பழங்களை கொத்தி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது.
மற்றொன்று வெறுமனே நோக்கியவாறு (சாட்சியாக) அமர்ந்திருக்கிறது.

பார்த்துக்கொண்டு இருக்கும் பறவை இயற்க்கைக்கு அப்பால்,
பற்றுகளில் சிக்கிக்கொள்ளாத, ஆத்மாவாக இருக்கிறது.
-- ரிக் வேத பாடல்.

ஒன்று அம்மரத்தின் பழங்களை கொத்தி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த பறவை உங்களது போருள்தன்மையான
அந்த ஆறு நிலைகளில் ( அசத்து,சத்து,இருள்,ஒளி,சவம்,உயிர்) சஞ்சரித்து கொண்டு
அசத்து,இருள்,சவம் எனும் மாயா நிலையான -
நேற்று, நாளை எனும் கற்பனை, அல்லது ஞாபக,
நிலையாகிய மாயா நிலையில் உள்ளது.

( இந்த நிலையே நமக்கு பரிச்சயமான நிலை.)
நாம் மனம் என்று இதையே சொல்லி வந்திருக்கிறோம்.

மற்றொன்று, வெறுமனே நோக்கியவாறு (சாட்சியாக) அமர்ந்திருக்கிறது.
இந்த பறவையே
சத்தான, ஒளியான, உயிர்ப்பான, இருப்பான காலம். இக்கணம்,இக்கணம் .

(இது, நாம் இதுவரை பரிச்சயப்படாதது.)
அந்த 'ஞான நிலை' வாய்க்கும் போதே பரிச்சயப்படுவது.
(வெறுமனே நோக்கியவாறு (சாட்சியாக) அமர்ந்திருக்கிறது- என்பதின் சூட்சுமம், காலம்.)

ஜாக்கிரதை

இதில் எந்த பயிற்சியையும் நீங்களாகவே செய்தல் கூடாது.

இந்த நான்கு பயிற்சியுமே ஒரு ஞாணமடைந்தவரிடமோ,
அல்லது அவரது மேர்பார்வையிலேயோ தான் செய்யப்பட வேண்டும்.

வெறும் புத்தகத்தை படித்து விட்டு யோகா செய்து
பைத்தியம் பிடித்தவர் அநேகர்.

ஜாக்கிரதை.

ஏனெனில்,
உங்களது ஆதி துவக்கமான ஒரு செல் உயிரிலிருந்து
இன்று மனிதனாக பரிணமித்தது வரை உள்ள
உங்கள் இயல்பை ,மாற்றி
இன்று வேறு ஒரு தளத்துக்கு உங்களை எடுத்து செல்வதே
இந்த பயிற்சிகள்.

மிக்க கவனம் தேவை. கவனம், கவனம்.

2 comments:

  1. //1, யோகா உடல் பயிற்சி,
    2, நாடி சுத்தி- மூச்சு பயிற்சி,
    3, ஓம் சாண்டிங்,
    4, த்யாநித்தல்//

    :)

    ReplyDelete
  2. //யோகா உடல் பயிற்சி,//

    யோகா -உடல் பயிற்சி அல்ல ...
    ஹட யோகா ..
    முதல்லில் உடலை தயார் படுத்துதல் :)

    ReplyDelete