Friday, June 18, 2010
மனதின் இயல்பு - ஓஷோ
மனம் என்று ஒரு தனிப்பொருள் இல்லை. இருப்பவை எண்ணங்கள் மட்டுமே . எண்ணங்கள் உங்களிலிருந்து சுயேச்சையாக நிலவுகின்றன .உங்களின் சொந்த தன்மையுடன் ஒன்றியவையாக அவை இல்லை . எண்ணங்கள் உங்களுடையவை என நீங்கள் நினைத்துக்கொண்டே போகிறீர்கள் . அதுமட்டுமல்ல உங்கள் எண்ணங்களுக்காக நீங்கள் சண்டை பிடிக்கிறீர்கள் . " இதுவே எனது எண்ணம், இதுவே உண்மை" என்கிறீர்கள் . நீங்கள் அதற்காக விவாதிக்கிறீர்கள் , தர்க்கம் செய்கிறீர்கள் , வாதாடுகிறீர்கள் . " இது என் கருத்து" என நிறுவ போராடுகிறீர்கள் .
எந்த எண்ணமும் உங்களுடையவை அல்ல . எந்த எண்ணமும் அசலானது அல்ல . எல்லா எண்ணங்களும் கடன் வாங்கப்பட்டவையே . அவை இரண்டாவதாக ( உங்களிடம் ) வந்தவை கூட அல்ல . ஏனெனில் உங்களுக்கு முன் கோடிக்கணக்கான மக்கள் அதே எண்ணங்களை தமதென்று உரிமை பாராட்டி புழங்கி இருக்கிறார்கள் . பொருட்களைப்போலவே எண்ணங்களும் வெளியில் தான் உள்ளன . அறிவியலானது சடப்பொருளுக்குள் ஆழமாக போகப்போக - பொருட்கள் என்பவை எண்ணங்களே என்பது அதற்கு அதிகமதிகம் தெளிவாகிறது என்று மாபெரும் விஞ்ஞானி எடிங்டன் ஓரிடத்தில் கூறியிருக்கிறார் . அது அப்படி இருக்கலாம். உங்களுக்குள்ளேயே நீங்கள் மென்மேலும் ஆழ்ந்து சென்றால் எண்ணங்கள் அதிகமதிகமும் பொருளைப்போல் தோன்றும் . உண்மையில் இந்த இரண்டுமே ஒரே நிகழ்வின் இரு அம்சங்களே : பொருள் ஒரு எண்ணமே , எண்ணம் ஒரு பொருளே .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment