Friday, April 19, 2013




நான் யார்?

நான் மட்டும் உள்ள
இந்த பிரபஞ்சத்தில்
நானும் இருக்கிறேன்.

கவன குறுகல்
சுந்தரம்
கவன விரிவே நான்
நான் மட்டும்.

இங்கிருந்துதான் இங்கு
வரமுடியும்.

சிறிய இங்கு
சுந்தரம்
பெரிய இங்கு நான்.

நான் இருந்தால்
நான் மட்டுமே இருப்பேன்.

நிலை தடுமாற
வைப்பது
காந்தம்.

நிலை தடுமாற
வைப்பது
ஈர்ப்பு.

வெளியே எட்டிப்
பார்த்தால்
இழுக்கும்.

வெளுயே என்றால்
வெளியே
இழுக்கும்.

எதையும்
மாற்றாமல்
சும்மா
இருக்கும் இடத்திலேயே
இரு.

இழுப்பது எது?

ஒன்றை
இரண்டாக்குவது
சுவாசம்.
ஒன்றாக
இருக்கையில்
ஒன்றுமில்லை.

சுவாசம்
ஒன்றாயிருக்கையில்
ஒன்றுமில்லை.

ஒரு நாடி
மின்
ஒரு நாடி
காந்தம்.

பொருளே
வடிவு.

அந்தப்பக்கம்
இருப்போருக்கு
அலுப்பில்லை.

சொல்
பொருளுக்கேற்ற
படி

ஒன்று
ஒன்றுமில்லை
இரண்டு
மின் – காந்தம்
மூன்று
மொழி-சொல்-பொருள்.

மொழி
தமிழ்.

ஒன்று
ஒன்றுமில்லை
இரண்டு
மின் – காந்தம்
மின் –காந்தமிடையே
சலனம்
மின் -
காந்தம் +
( கணக்கு )
ஒன்றில் சலனம்.

தீ
ஊத ஊத
சலனமேறும்.

சுவாசம்
நின்ற இடம்
விருத்தி.

உனக்கு வேண்டியது
எல்லாம்
உன்னிடமே உண்டு.

வேண்டிய இடத்தில்
நிறுத்திக்
கொள்.

வேண்டிய இடத்தை
வேண்டு.

வேண்டத் தெரிந்தால்
வேதனை இல்லை.

வேண்டுதல்
எங்கிருக்கிறது
கவனி.

மனதார
வேண்டு.

வேண்டுதல்
எங்கிருக்கிறதோ
அங்கேயே
வேண்டு.

வேண்டிய இடத்திற்கு
உதவி
செய்.

உயிரே
அமுதம்.

உயிரைக்
கொடுப்பது
அமுதநிலை.

உன்னைக்
கொடு.

உயிரை
அமுதமாக்கிக்
கொடு.

ஆசை
குறைந்தால்
தர்மம்.

ஆசை
குறைந்தால்
தர்மம்
நிலைக்கும்.

ஆசை
அற்றவனை
அரியணையில்
வை.

இது
அரசியல்
பொருள்.

பொருள்
அணு
பொருள் அரசியலால்
பூமி வரை
தோற்றம்.

நடுவிலே
ஒன்றும்
இல்லை.

ஒன்றுமில்லை
என்றால்
ஒன்றுமில்லை.

உணர்ச்சி
அற்றவனுக்கு
ஒன்றுமில்லை.

உணர்ச்சியில்
இருந்து
உயிர்

மின் – காந்த
சலன
இடம்
உணர்ச்சி

சுவாச
உணர்ச்சி


சுவாசத்துக் கேற்ற
உணர்ச்சி

நீருக்கு
ஏற்ப
சுவை

நான்
ஒன்றா?
பலவா?

ஒன்றிலிருந்து
பல.

ஒன்றினால்
ஒன்று

விரிந்தால்
பல

அப்படிப் பட்ட
ஒன்று
இது

ஒன்றினால்
ஒன்றும்
விரிந்தால்
பலப்பல
அதன் போக்கு

பொருளுக்கு
ஏற்ற
போக்கு

பொருளுக்கு
ஏற்ப
போக்கு

மனம்
திறப்பதே
மார்க்கம்

மனதை
பிளந்தால்
மனம்
திறக்கும்

மனதைப்
பிளக்க
மாற்றமில்லை

நடு மனதில்
கவனம்
வை

ஒன்றினால்
கவனம்

ஒவ்வொன்றுமானால்
அறிவு

மனமே
கதவு

கதவைத்
திற
கதவைத்திறக்க
ககனம்.
ககன வெளி.

விருப்பம்
முடிந்தால்
வினை
முடியும்

வினையால்
விளையாட்டு

விருப்பம்
உள்ள
வரை

எதனால் சாகிறாய்
என்பதைப் பொறுத்து
பிறப்பு

ஆசையை
விட்டால்
அலுப்புயில்லை.

ஆசையின்
அளவே
நான்.














.


No comments:

Post a Comment