Friday, April 19, 2013



ஓம குண்டம்

சொல்லுக்கு சொல்
இணையும்.
ஒரு சொல்
ஒரு அண்டம்.
அண்டமே குண்டம்.
இணையும் வாய்.
அண்ட அண்டமாய்
இணையும் வாய்.
வாயில்
இணையும்.
வாயே
அக்கினி வாய்.
அக்கினி வாய் அண்டத்தின் வாய்.
அக்கினி அண்டத்தின் நாக்கு.
அக்கினிக் குண்டம்.
ஓம குண்டம்
அர்ப்பணம்
அர்ப்பணி.
அஹங்காரத்தை
அர்ப்பணி.
சொல்லை அர்ப்பணி
வாய் அகண்டு திறந்து
சொல்லாக
உன்னை அர்ப்பணி.
வாயை
திற
அக
அகம்.
தமிழ்.
அ ஆ இ ஈ
உயிர்.
க ங ஞ ச
மெய்.
உயிர் மெய்.
ஆகுதி
பூர்ணாகுதி
கும்பி
உயிர் மெய் கும்பி
பூர்ண கும்பி.
கும்ப
பூர்ண கும்ப.
கொடு.
பூர்ண கும்பமாக கொடு.
பூர்ண கும்ப பூர்ணாகுதி.
பதார்த்தத்தில் பூரணம்.
ஒவ்வொரு பதார்த்தத்திலும் பூரணம்.
ஒவ்வொரு பதார்த்தமும் பூரணம்.
எங்கும் பூரணம்
எதிலும் பூரணம்.
சொல்கிற சொல்லில் பூரணம் வை.
சொல்லில் பூரணம் வைத்து சொல்பவன்
பூரணன்.

( வேறு )

வயிறே அறிவு.
பசிக்கு ஆகாரம்.
பதார்த்தமே உணவு.
பதார்த்தம் நிறைய பூரணம்
வயிறு நிறைய
அனைத்தும் நிறையும்.
நிறைந்தால்
பூரணம்
பூரணமும் பூரணமும் இணைந்தால்
பூரணம்
பரிபூரணம்.
திருப்தி.
பூரண திருப்தி.
பரம திருப்தி.
பூரணமும் திருப்தி.
நீ
தொட்டால் திருப்தி
நீ பார்த்தால் திருப்தி
நீ நினைத்தால் திருப்தி
அருள் பிரவாகம்
அருட்கடாட்சம்.

















No comments:

Post a Comment