இருப்புத்தன்மை
உங்களுடைய இருப்புத்தன்மையை உங்களுடைய மூளையில் நிறுத்தி
வைத்திருந்தால்
அது எண்ணுகிறது,
அது ஒன்றைப்பற்றி சிந்திக்கிறது.
அது ஒன்றைப்பற்றி கருதுகிறது
அது முடிவெடுக்கிறது
அது மற்றவரிடம் தன்னைக் காட்டிக்கொள்ளாமல் கபடம் கற்று
தருகிறது.
உங்கள் இருப்பை உங்களது முதுகுத்தண்டில் உள்ள ஒவ்வொரு
சுரப்பியிலும் ( சக்கரா ) நிலை நிறுத்திப் பார்க்க
உங்கள் உணர்வில் இருக்கிற மாற்றங்களை
உணர முடிகிறது.
சுரப்பிகளில் சுரக்கும் அமிலம் ரத்தத்தில் கலக்காவிட்டால்
உங்களுக்கு உணர்வே இருக்காது.
உங்கள் இருப்பை கண்களின் இரண்டு ஆதாரங்களிலும் நிறுத்தி
(முக்கோணமாக )
இரு ஆதாரங்களையும்
மேல் நோக்கி
ஆக்னா சக்கரத்தில் நிலை நிறுத்த
அங்கிருந்து ஒளி கிளம்புகிறது.
அந்த ஒளியில் உங்கள் இருப்பை நிலையை நிறுத்த
உங்கள் அறிவு விளக்கம் பெறுகிறது.
அந்த அறிவாகவே தொடர்ந்து உங்களை நிலை நிறுத்த முடிந்தால்
அறிவே பிரபஞ்சம் ஆகிறது.
‘அறிவால் ஆனது அண்டம்’ என மொழிய முடிகிறது.
அடுத்து பூரணம் என்கிற சொல்லில்
உங்கள் இருப்பு தன்மையை நிலை நிறுத்த முடிந்தால்
பூரணம் அடைகிறீர்கள்.
பரிபூரணம் என்ற
சொல்லில்
உங்கள் இருப்புத்தன்மையை நிலை நிறுத்த தெரிந்தால்
பரிபூரண நிலையில் நிற்கிறீர்கள்.
உங்கள் இருப்புத்தன்மையை
முழுமையாக உங்களால் எங்கே வைக்க முடியுமோ
அதுவே உங்கள் பிரபஞ்சம் ஆகும்.
ஒரு சொல்லில் உங்கள் இருப்பை பூரணமாக வைத்தால்
அந்த சொல்லே உங்கள் பிரபஞ்சமாக விரிகிறது.
நன்றாக புரிந்து கொள்ளுங்கள்
உங்களுடைய இருப்பு என்பது
உங்களுடைய கவனம் ஆகும்.
உங்களுடைய இருப்பு என்பது உங்களுடையது அல்ல!
இந்த பிரபஞ்சத்தினுடையது ஆகும்.
பிரபஞ்சம் உங்கள் வழியாக
இதையெல்லாம் நிகழ்த்திக் கொள்கிறது.
No comments:
Post a Comment