Friday, April 19, 2013




தொழில்

ஒன்றுக்கு ஒரு தொழில்.
வெளியேறு
இதுதான் தொழில்.
வெளியேறி
வெளி ஏறி
மின்னல் விசையில் பெருக்கம்
எப்போ என்ற காலம்
கால காலமாக
எப்போ x கால காலமாக.
ஒன்றுக்கு ஒரு தொழில்
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தொழில்
வெளியேறு
வெளியேறினால் முரண்.
முரண்
முரண் பட்டால்
எங்கும் ஒரே முரண்.

முரண்
இரண்டு.
சந்தித்ததெல்லாம்
சந்ததி.
சந்ததி பெருக்கம்.
ஒன்றொன்றும் விரியும்.
நீ
எடுக்கிற ஓய்வைப் பொறுத்து.
ஓயும்.
எதோ
சொல்லின் வழி இறங்கும்
கொள்ளளவு.
வெளிக்கு பெருக்கல்.
பரிசு.
பல கிளைகள்
கிளைக்கு கிளை
இப்படியே ஒன்றுக்கு ஒரு தொழில்.

ஒன்றுக்கு ஒரு தொழில் இணைக்கும்.
விரிந்து கிளைக்கும்
தொழிலோடு இணைந்த தொழில்
ஒரு தொழிலா இது பல தொழிலா?
ஒன்றிலே பல
பலவும் ஒன்றே.

இவன்
இவனால்
அவன்
ஊது
தேடி
என்றால்
மறுபடி
மறுபடி மறுபடி
பழக்கம்
பழக்கம் பழக்கமாக
சொல்லுக்குள் சொல்
ஒளியும்.
சொல்லை இணைத்தால்
ஒன்றுக்கு ஒன்று
ஒன்றுக்குள் ஒன்று.
இப்படி இப்படி ஒன்றுக்கு ஒன்று
ஒன்றுக்குள் ஒன்று.

எதிர் முரண்
முரணுக்கு
எதிர் முரண்
x x x x x x x x x x x x  = 0
முடிவாக
ஒன்றுமில்லை.
எதிர் முரணுக்கு x எதிர் முரண் = திசை.காலம் பொருள், தோற்றம்.( திசை,காலம்,பொருள் தோற்றம்.)  .
வெடிப்பு.
ஒரே வெடிப்பு
ஒரு கோடி வருஷ தூரம்.
வெடிப்பு ஒரு நொடி.
காலமாக விரிந்தது
கால காலம்.
மையத்தில் நொடி நேரம்
எல்லையின் விளிம்பில் கால காலமாக.
விசையும் வேகத்தையும் பொறுத்து
எதைப்பொருத்தினாலும் பொருந்தும்.
பல மொழி
பல மொழிகள்
புரிந்தால் புரியும்
வேண்டாம் வேண்டவே வண்டாம்.
மொழியறி
அறிந்து கொள்.
எப்படி வேண்டுமானால் அறி
அறிய அறிய மொழி.
யாருமேயில்லை.
முடியும்.
யாரிடம் யார் சொன்னது?
ஆர்வம்
ஆர்வத்துக்கு ஆர்வம்.
என்
என்னோட
எங்கே போனாலும் தமிழ்தான்.
தாய் மொழியில்.
தமிழ் தாய் மொழிக்கேல்லாம் தாய் மொழி.

மூலத்தை தேடினால்
மூலமேயில்லை.
இருக்கும் பொழுது ஏன் மறந்தது?
நீ இருக்கிறாயா இல்லையா என்று உனக்கு ஏன் கேள்வி வந்தது?
உனக்கு ஏன்  சந்தேகம்?
இருக்கிற மாதிரி ஒரு தோற்றம்.
தோற்றத்திலேதான் தோற்றம்.
தானாய் எழும் அலை.
உட்சலனம்.
எல்லா மாதிரியும் தெரியும்.
மாதிரி
உண்மையா மாதிரியா ?
சற்று தாமதம்
தாமதம்
தயக்கம்
தாமிசம்.
மொழி தீர்க்கமானால்
வழி தீர்க்கமாக தெரியும்.

நினைப்பு
வசியம்
அவசியம்
சந்தேகம் ஒரு  படி தயங்கினால்
ரெண்டி படி முன்னேறும்.
தயக்கம்தான்
ஆசை அழைக்கிறது.
சந்தேகம் ஒரு படி தயங்கினால்
தீர்மானம் இரண்டு படி முன்னேறும்.
இரண்டு யானை ஒரே முளையில்.

மொழி அறி
சொல் தீர்க்கம்.
மொழி தீர்க்கமானால் வழியும் தீர்க்கமாகும்.
சம்மதத்தோடு கொல்.
இறுதி வரை சம்மதமா?
ஒப்புக்கொடு
உளமார ஒப்புக்கொடு.
பூர்த்தியாகும்.

அர்த்தம் நீதான் கற்பித்துக் கொள்கிறாய்.
உனக்கு புரிந்தால் சரிதான்.
உனக்கு புரிந்தால் போதும்.
அர்த்தம் தெரியாததால்தான்
அகண்டு கிடக்கிறது.
கண்டவர் விண்டிலர்.
காணப்போனவன் வரவேயில்லை.
திரும்பி வந்தவன் கண்டதில்லை.
என்னையே நான் தேடினால் கிடைக்குமா?
நான் என்னைத்தவிர வேறு எங்குமே இல்லையே.
என்னை நான் கண்டு பிடித்தால்
கண்டு பிடிப்பவன் காணாமல் போகிறான்.
அவன் இருந்தால் இவன் இல்லை.
இவன் இருந்தால் அவனை காணவில்லை.
உனக்கு ரெண்டு வாய்.
ஒரே சொல்லின் இரண்டு வாய்.
யாருமில்லை என்னைத்தவிர
உள்ளதை மொழிகிறது தமிழ் சொல்.

எப்படி இணைத்தாலும் இணையும்.

சம்மதம்
இருக்கும்வரை
யாருமில்லை.
யாருமில்லை யாரும் வேண்டாம்.

இருக்கிற வரை.
இரண்டில்லாமல் ஒன்றில்லை.
கருதுகிறது படி.
கருதுகிற படி.
நான் இல்லையென்றால் எதுவுமேயில்லை.
நான் இல்லையென்றால்
எதுவுமேயில்லை எனக்கு.
நானே காரணம்.
நான்தான் காரணம்.
ஏற்றுக்கொள்.
ஏற்றுக்கொண்டால் பரிசு.
நிம்மதி.
நினைப்பை விட்டு விடு நினைக்காதே,
நினைப்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை.
இல்லை எதுவுமே இல்லை.
அது தானே இது.
அதுதான்.
கேள்வி இல்லை என்றால் பதிலும் இல்லை.


ஒவ்வொன்றும் உள்ளுக்குள்ளும் விரியும்.
வரை விரிந்த வரை.
அதோ அதுவரை
உன் எண்ணம்போல உன் உலகம்.
நீ
மட்டும்
ஒத்துக்கொண்டால்
தீர்ந்துவிடும்.
நிரம்பிவிட்டால் நின்றுவிடும்
நிரம்பி
நிறைம்பி
ஏன் இருக்கும் வரை.
இருக்கிறவரை இருந்துகொண்டேயிருக்கும்.
கை கழுவி விடு.
இருக்கிறதை எல்லாம் விட்டு விடு.
விட முடிந்தால்
விட முடிந்தால் விட்டு விடு.


அது அதற்கு
ஒரு தொழில்
அதனதன் தொழில்.
இணைந்தால் பெருந்தொழில்.
முதலுக்கு ஏற்ற தொழில்.
உன் விருப்பம் எங்கு வேண்டுமானாலும் முடிக்கலாம்.
கதையையா?
கதையையும் முடிக்கலாம். காரணத்தையும் முடிக்கலாம்.
விருப்பம்தான். முடிய விருப்பம்.
இடம் இருந்தால் ஏற்றுக் கொள்ளும்.
இருந்தால் இருக்கலாம்.
போனால் போகலாம்.
இங்கு யாராவது இருக்கிறார்களா?
யாரை கேட்பது?
நீ பேசி நீயே கேட்டுக் கொள்வதில் சுவாரஸ்யம் இருக்கிறதா?
பைத்தியமா?
பைத்தியமா? பைத்தியம் இல்லையா?
பைத்தியத்துக்கு எப்படி தெரியும்?
அசையாமல் நிறுத்து.
விருப்பம் இருந்தால் நிறுத்திக் கொள்.


நான் யார்?
நீ விரும்புவதற்கு யார் பொறுப்பு.
உன் விருப்பம்.
விருப்பமே இல்லை.
நாம் என்ன செய்ய முடியும்?
எந்த விருப்பமும் இல்லை.
போனால் போகட்டும் போடா!
நான் இல்லாத இடம் நன்றாக இருக்கிறது.
எப்படியாக இருந்தால் நீ இருப்பாய்.
இருக்க முடிந்தால் இரு போக முடிந்தால் போ!
எங்கே போவது?
நீ இல்லாத இடத்துக்கு
நான் இல்லாத இடமே இல்லை.
எல்லா இடத்திலும் நான்.
அதுவும் நானே!
ஒரே அர்த்தம்தான் பலவாறாக  புரியும்.
முடிவெடுக்காதே!
அர்த்தத்திலே அர்த்தம் இல்லை.
அர்த்தத்துக்கே அர்த்தம் புரியாது.
அர்த்தமும் புரிவதும் ஒன்று இல்லை.
புரிந்த வரைக்கும் அர்த்தம்.
புரிந்து கொள்வதைப் பொறுத்து.
புரிந்து கொள்ள புரிந்து கொள்.
புரிந்து கொள்வது புரிந்தால் புரியும்.

தமிழோடு விளையாடு.
எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
அப்புறமென்ன இருந்துகொள்.
எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்றால் பிரச்னையில்லை.
ஒன்றும் தப்பில்லை.
இதிலேயும் ஒன்றுமில்லை
அதிலேயும் ஒன்றுமில்லை.
இருக்கிறதும் ஒன்றுதான்
இல்லாததும் ஒன்றுதான்
புரிகிற முறையில் புரிந்தால் புரிந்து கொள்ளலாம்.
திரும்பிப் பார்க்காதே!
காது கேட்கவில்லை என்று இரு.
இது முடியாது.
இது முடிகிறவரை முடியாது.

சொல்லின் மூலம்
சொல்லின் திருக்கத்தைப் பொறுத்து
புளிப்புக்கு ஏற்ற உப்பு
உப்புக்கு ஏற்ற காரம்
ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு பண்டம்.
ருசி
பசி
பசி ருசியறியாது.
பசி இருந்தால் சாப்பிடு.
நீ தான் எடுக்கணும் முடிவு.
அவன் அவன் எடுக்கிற முடிவுதான்.
அவன் அவன் எடுக்கிற முடிவுதான்
அவன் அவனுக்கு சரி.
பிடிவாதம் பிடித்தால் இருக்கட்டும்.
போகிறேன் என்றால் அனுப்பி விடு.
சும்மா.
நீ எங்கேயும் போக முடியாது.
சும்மா நீ எங்கேயும் போக முடியாது.
உனக்கு தெரியுமா? இருந்தால்தானே போக முடியாது
நான்தான் இல்லையே!
உனக்குள்ளேயே நீ ஒளிந்து கொள்.
தான் இல்லை என்பது அறியாமை.
அறியாமைதான் தான்.
நான் யாரோ!
நான் யாரோ?
அவன் பாவம் விட்டு விடு.

யார் என்று கருதுவது நீயில்லை.
இங்கே எப்படி வந்தாய்?
நான்
எங்கே இருந்தேன்?
இதற்கு முன் இருந்தாயா?
இப்போது இருப்பதுதான் நான்.
இதற்கு முன் நான்?
இருந்ததில் வை.
எங்கிருந்தாவது வந்திருந்தால்தான்
எங்காவது போக வேண்டும்.
நான் இங்கிருந்தே வந்தேன்
இங்கேயே போகிறேன்.
இங்கேயே போக முடியாது
இங்கேயே இருக்கலாம்.
இருப்பதோ
போவதோ
இங்கேதான்.

இது இங்கேயே இருந்திருக்கிறது.
எது இருக்கிறதோ
அது உள்ளேயே இருக்கிறது.
ஒன்றொன்றும் இருக்கிறது
ஒன்றுமேயில்லை.
இருந்தால் இருக்கட்டும்
இல்லை என்றாலும் இருக்கட்டும்.
அது
இங்கே இருந்தாலும் சரி.
அது
அங்கே இருந்தாலும் சரி.
அது எங்கிருந்தாலும் சரி.
அது இல்லை என நினைத்துக் கொள்கிறேன்.
முடியுமா?
முடிந்தாலும் ஒன்றுமில்லை.
முடியவில்லை என்றாலும் ஒன்றுமில்லை.
அப்புறமென்ன?
காரணம் காண்பது இரண்டு பேர்
அர்த்தம் ஒருவனுக்கா?
இப்படித் தான் மொழி இயங்கும் வரை
முடியாது.
மொழி வேண்டாம் என்றால்
மூடிக் கொண்டிரு.


திறந்தால்
மொழிவதற்கே திறக்கும்.
திறந்தால்  மொழியும்.
மொழி வழிதான் திறக்கும்.
அது மொழியா?
மொழியல்ல வழி.
மொழிவழி.
அது வழி.
அர்த்தம் எடுக்கிற வரைக்கும் அர்த்தம்.
அர்த்தத்தில் எதுவும் அர்த்தம் இல்லை.
உனக்கு வசதியாக இருக்கிறது.
உன் வசதி
உன் வசதிக்கு
உன் வசதிக்கு நீ செய்து கொள்.
தெரிந்து கொண்டு முடித்துக் கொள்.
தேவையில்லை
என்றாலும் முடித்துக் கொள்.
ஏனப்பா கஷ்டப்படுகிறாய்?
இஷ்டமா? கஷ்டமா?
உனக்கு நிறைய வாய்ப்பு.
கணக்கு வழக்கை நேர் பார்.
நேர் பண்ணும் பொது தெரியும்
எல்லோருமே நல்லவர்கள்தான்.
இருக்கும் பொழுது எதற்கு?
எதற்கும் கொஞ்சம் இருக்கட்டுமே என்று.
முடிந்தால் முடிந்துவிடும் தெரியாதா?
மறுபடியும் உண்டா?
உண்டு. வேறு மாதிரி.
வெவ்வேறு மாதிரி.
விருப்பம் இருந்தால் இருக்கும்.
இல்லை என்றால் போய் விடும்.
இருந்தால் நினைப்பு.
இல்லா விட்டால் நிம்மதி.

உள்ளேயும் மூடலாம்
வெளியேயும் மூடலாம்.

உள்ளே முடிந்தாலும் சரி
வெளியே முடிந்தாலும் சரி.
அக்கப்போரே வேண்டாம்.
அமைதியாக இரு.
காலத்துக்கு விடுதலை.
காலத்துக்கும் விடுதலை.
உன்னால் முடியாது.
எப்போது முடியுமென இப்போது தெரியாது.
இருந்தால் இருக்கட்டும்.
போனால் போகட்டும்.
செத்துப் பார்த்தால் வேலை முடியும்.
சாகிற மாதிரி இரு.
உள்ளே போக ஒரே வாசல்.
ஒரே வழி
உள்ளே செல்.
ஒளிந்து கொள்.
உனக்குள்ளே நீ ஒளிந்து கொள்.
தேடினால் கிடைக்கும் சும்மா இரு.
நீ இல்லாமல் போ!
உறங்கு
தூக்கத்தில் உலகம் இல்லை.

உறக்கம்
விழிப்பு.

விழித்தால் எல்லாம் கூடும்.
உறங்கலாம் விழிக்கலாம்
எங்கும் போக முடியாது.

போக விரும்பினால் உன் உள்ளேயே போ!
ஏதாவது எழுப்பினால் எழுந்து விடுவேன்.
எனக்கு தூங்க பிடிக்கும்.
யாரும் எழுப்பாதீர்கள்.


இதுவரை உனக்கு புரிந்திருந்தால்
உனது பிறப்பு இறப்பை அறிந்து
முற்றிய ஞானத்தோடு வீற்றிருப்பாய்.

இது என் தொழில்.

























.















No comments:

Post a Comment