தமிழ்
தமிழ்
v
மொழி x
வழி
v v
மொழியாய் x
மொழிதல்
வழியே
x வழிவழியாய்
v v v v
மொழியாக x மொழியாகவே. சொல்லுதல் x மொழியே தன்னை செலுத்துதல். செல்லுதல்
x வருதல். கூடும் x பிரியும்.
இப்படியாக முரணில் பெருகி விரிவடைவது பிரபஞ்சம்.
விரிவடையும் வழி மொழி எனப்படும். இந்த மொழிக்கு பெயர் தமிழ்.
தமிழே பிரபஞ்ச நிரல்.
ஒவ்வொரு
தமிழ் சொல்லுக்கும் இரண்டு வாய்,
ஒன்று மின் மற்றது காந்தம்.
தனித்த ஒரு சொல் மின்காந்தமானது.
ஒரு சொல் ஒரு அண்டத்துக்கான
விதை.
ஒரு சொல்லும் ஒரு
நிரல்தான்.
தமிழே ஒரு சொல்தான்.
தமிழ்
அண்ட சராசரத்துக்கான குறியீடு.
உண்மைக்கு அருகில்
வழி வழியாய்
இறங்கும்
மரபும்
மொழியும்
பிரபஞ்சமும்.
காரணம் திருகல்.
மரபணு திருகல்.
மொழியும் திருகல்.
பிரபஞ்சமும் திருகல்.
எல்லாமே ஒன்றிலிருந்து முளைத்தது
ஒன்றிலிருந்து ஒன்று முளைத்தது.
ஒன்றிலிருந்து ஒன்று கிளைத்தது.
ஒன்றிலிருந்து ஒன்று விரிய விரிய
ஒன்றிலிருந்து ஒன்று கிளைக்க கிளைக்க
அந்தந்த இடத்துக்கும் அந்தந்த அர்த்தம்.
எல்லாம் ஒரே அர்த்தம்.
பொருளும் திருகல்தான்.
இது சும்மா இருக்குமா?
பிறப்பதற்கு தான் காரணம் உண்டு.
இருப்பதற்கு காரணம் இல்லை.
இருந்துகொண்டே இருப்பதற்கு என்ன காரணம்.
அடியும் இல்லை
முடியும் இல்லை.
ஆராய வேண்டாம்
அப்படியே பார்.
No comments:
Post a Comment