Thursday, December 29, 2011

மனிதன் என்பது யார்?

2

மனிதன் என்பது யார்?
மனிதன் என்கிற ( மெட்டீரியல் ) பொருளை நாம் அறிவியல் பூர்வமாக ஆராய வேண்டியுள்ளது. மனிதன் ஒரு உயிருள்ள பொருள். அவன் ஒரு தனித்த ஓருயிர் கிடையாது. மனிதன் உயிர் செல்களால் ஆக்கப்பட்டிருக்கிறான். சுமார் 75 ட்ரில்லியன் செல்கள் சேர்ந்த ஒரு அமைப்பு. அந்த 75 ட்ரில்லியன் செல்களும் 210 வகைகளாக உள்ளன! இவைகளில் மிக நுட்பமானவை நரம்பு செல்கள். உயிர் இந்த பூமியில் தோன்றி 350 கோடி வருடங்கள் ஆகின்றது. அது அன்று தொட்டு பல்கி பெருகிக்கொண்டேயிருக்கிறது. உயிர் என்பது தன்மையால் ஒன்றேயாகும். இந்த பிரபஞ்சத்தின் அலகு அணு என்பது போல! உயிரின் அலகுஉயிர்செல்’லாகும். அது ஒரு செல் உயிரி, பல்வேறு தாவரங்கள், ஊர்வன, பறப்பன, விலங்குகள், மனிதன் என பல்வேறு சரீரங்களை அமைத்துள்ளது. மனிதன் என்கிற சரீர நிலைக்கு வர அது பல்வேறு படிநிலைகளை கடந்து வந்துள்ளது. அந்த தகவல்கள் அவனது D N A வில் இருக்கிறது. 350 கோடி வருட காலமாக உயிர் வளர்ந்து கொண்டிருக்கிறது. அந்த உயிர் தன்னை வளர்த்திக்கொள்ள உணவை தன்னிலிருந்தே எடுத்துக்கொள்ளுகிறது. உயிரால் கட்டப்பட்டுள்ள அனைத்து சரீரமும் உயிருக்கு சம்பந்தப்பட்டதையே உணவாக தேர்ந்து கொள்ளுகிறது. உயிர் தொடர்ந்து தன்னை வளர்த்திக்கொள்ள ஒவ்வொரு சரீரங்களுக்கும் தான் எனும் அறிவையும் சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறது. அந்த அறிவைக்கொடுத்து அவைகளை மாயையில் வைத்திருக்கிறது. இது ஒரு செல் உயிரியான பாக்டீரியாவில் தொடங்கியே காண முடியும். ( பாக்டீரியாக்கள் பேசிக்கொள்ள ஒரு மொழி உண்டு என்று சொன்னால், எத்தனை பேர் நம்புவார்கள்? ஆனால், உண்மையில் அவைகளுக்கென்று ஒரு தனி மொழி இருக்கிறது. இம்மொழியைக் கொண்டு பேசி கலந்தாலோசித்துவிட்டுத்தான் பல முக்கிய முடிவுகளை எடுக்கின்றன என்று ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. பாக்டீரியாக்களின் அந்த சங்கேத மொழியை பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து அதில் சில வார்த்தைகளை மனிதர்களாகிய நாம் கற்றுக்கொண்டுள்ளோம். நம்பமுடியவில்லையா? ஆம், பாக்டீரியாக்கள் தங்களுக்குள் தொடர்புகொள்ள, சில வேதிப்பொருட்களை தயாரித்து அதன் சுற்றுப்புறத்துக்கு அனுப்புகிறது. அப்படி அனுப்பப்பட்ட வேதிப்பொருட்களை உணர்வதன் மூலம் யார் தம் சுற்றத்தார் என்பதை தெரிந்துகொள்கிறது. நுண்ணுயிரிகளின் இந்த திறனை ஆராய்ச்சியாளர்கள், 'குவாரம் சென்சிங்' (Quorum sensing) என்று சொல்கிறார்கள்.

ஒரு ஒரு-செல்உயிரிக்கு இந்த திறன் எதற்கு என்ற கேள்வி எழுகிறது, இல்லையா? ஆனால், இக்குணங்கள் பரினாம வளர்ச்சியில் தத்தம் இனத்தின் வளர்ச்சிக்காகவும், அனுகூலமற்ற புறச்சூழல்களிலிருந்து காப்பதற்காகவும், தீங்குவிளைவிக்கக்கூடிய மற்ற உயிரிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காகவும் அவற்றை எதிர்ப்பதற்காகவும் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டவையாகக் கருதப்படுகிறது. Link: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17092:2011-10-21-08-27-58&catid=24:nature&Itemid=102 )

உலகில் உள்ள ஒவ்வொரு உயிருக்குமே 'தான்' என்கிற அறிவு உண்டு. இந்த சரீரங்கள் தங்கள் சரீரத்தையே தான் என அபிமானிக்கின்றன. இந்த தான் என்பதன் உச்சமே மனித சரீரம். மனிதன் தன்னை ( சரீரத்தை ) காத்துக்கொள்ளும்பொருட்டே அனைத்து வித காரியங்களையும் செய்கிறான் என்பது வெள்ளிடையாக தெரிகிறது. மனிதனின் இந்த 'தான்'என்ற அறிவே மனமாக செயல்படுகிறது. மற்ற உயிர்களை ( சரீரங்களை ) விட மனிதனுடைய 'தான்' என்கிற அறிவு சற்று விசாலமானது. வித்தியாசமானது. இந்த அறிவுக்கு நினைவக செயல்பாடு உண்டு. பல பதிவுகளை அது கொண்டுள்ளது. இதுவும் ( உயிரின் அல்ல) சரீரத்தின் பரிணாம வளர்ச்சியே!

No comments:

Post a Comment