Friday, January 6, 2012

3

சரீர மாயை.
தரிசனங்கள் என்பவை அடிப்படையில் வேதங்களை விடவும் காலத்தால் முந்தியவை .அதிபுராதன காலத்தில் பழங்குடிகளாக வாழ்ந்த மனித மனத்தில் எப்படியோ உருக்கொண்டவை. பிறகு அவை மெல்ல மெல்ல தத்துவங்களாக வளர்ந்தன. உபநிடதங்களும் தரிசனங்களின் அடிப்படைக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டன.
1. நியாயம் - கௌதமர்
2. வைசேடிகம் - கணாதர்
3. சாங்கியம் - கபிலர்
4. யோகம் - பதஞ்சலி
5. மீமாம்சை (பூர்வ மீமாம்சை) - ஜைமினி
6. வேதாந்தம் (உத்தர மீமாம்சை) - பாதராயனர்
சாங்கிய தரிசனம் இப்பிரபஞ்சமானது செயலூக்கம் , செயலின்மை ,சமநிலை [ ரஜஸ், தமஸ், சத்வம்] என்ற முக்குணங்களினால் ஆன ஆதிப்பிரகிருதியால் [அல்லது மூலயியற்கை] ஆனதாக இருந்தது என்கிறது .

அக்குணக்கள் அதில் முழுமையான சமநிலையிலிருந்தன. அந்த சமநிலை குலைய நேரிட்டமையால் ஆதியியற்கை செயல்பட ஆரம்பித்து நாம் காணுமிந்த சலனவடிவ பிரபஞ்சம் உருவாயிற்று. மீண்டும் அந்த செயல்வடிவை அடைவதே அவ்வியற்கையின் நோக்கம் என்கிறது சாங்கியம் . ஆகவே சாங்கியத்தின் அடிப்படைக் கருத்து பொருளிலிருந்தே பொருள் உருவாக முடியும் என்பதாகும். ‘கருத்திலிருந்து’ பொருள் உருவாக முடியாது என அது வாதிட்டது . இதை அவர்கள் சத் காரிய வாதம் என்றார்கள் .
வைசேஷிகமும் பொருள்முதல்வாத தரப்புதான். அது ஆதிப் பொருள் அணுக்களே என்கிறது .அடிப்படைப்பொருட்களான நிலம், நீர்,காற்று, நெருப்பு ஆகியவை அவற்றின் ஆகச்சிறிய துகள்களினாலான அணுக்களினாலானவையாகும். அவற்றின் கூட்டு மூலமே பிற பொருட்கள் உருவாகின்றன. வைசேஷிகத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட துணைத்தரிசனமே நியாயம் ஆகும்.
நியாயம் இவ்வடிப்படைகளை தர்க்கபூர்வமாக எப்படி நிர்ணயிப்பது என்று பேசுகிறது. அதேபோல சாங்கியத்தின் துணைத்தரிசனமே யோகம் . நான்குமே அடிப்படையில் பொருள்முதல்வாதச் சிந்தனைகள். அதாவது அவை உருவகித்துக் காட்டும் பிரபஞ்சத்தில் கடவுளுக்கு ஸ்தானமே இல்லை .
சாங்கியத்தின் பிரபஞ்சக் கொள்கையே யோகத்துக்கும் ஏற்புடையது.ஆகவே யோகம் சாங்கியத்துடன் பிணைக்கப்பட்டு 'சாங்கியயோகம் ' என்றே முன்பு குறிப்பிடப்பட்டு வந்தது .
யோகம் எப்படி உருவாயிற்று என்றறிய நாம் 'புருஷன் ' என்ற கருதுகோளை புரிந்துகொள்ளவேண்டும் . உபநிடதங்களுடன் சாங்கியம் விவாதித்தபோது ஒரு முக்கியமான வினா எழுந்தது . மூன்று குணங்கள் எப்படி ,எவரால் அறியப்படுகின்றன ? அறியப்படாதபோது அவை இல்லை என்றல்லவா பொருள் ?
அதற்குப் பதிலாக சாங்கியர் உருவாக்கிய கொள்கைதான் 'புருஷன் ' என்பது.
பிரகிருதி என்பதை எப்படி உருவகிக்கிறோம் ? பூமியில் உள்ள அத்தனை பொருட்களையும் ஒட்டு மொத்தமாக தொகுத்து ஒற்றைப் பொருளாக கணித்து பிரகிருதி என்கிறோம் .அதேபோல எல்லா மனிதமனங்களையும் ஒன்றாக சேர்த்து உருவகிக்கப்பட்ட ஒற்றைப் பேரிருப்பே புருஷன் .
Thanks : http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20310029&format=print&edition_id=20031002
1, “முக்குணங்களாலான ஆதி பிரகிருதி ” என்கிறது சாங்கியம் . அந்த முக்குணம் என்பது 1, நியூட்ரான் . 2, புரோட்டான் , 3, எலக்ட்ரான் ஆகும் . நிலைமின், நேர்மின், எதிர்மின் . இதை சாங்கிய யோகம் முக்குணம் என சொல்லுகிறது. இதை அடிப்படையான முக்குணங்கள் என சொல்லுவதும் ஏற்புடையதே!
2, சமநிலை குலைய நேரிட்டமையால் ஆதியியற்கை செயல்பட ஆரம்பித்து என்கிறது . இந்த ஆதியியற்கை என்பது மின்தன்மையேயாகும்.சமநிலையில் இருந்த மின்னலைகள் சலனமுற மூன்றுவித , (மூவகை தன்மையுள்ள ) துகள்களாக உருவாகி அது அணுவாகிறது . அணுக்களின் கூட்டுறவால் தனிமங்கள் தோன்றுகின்றன! அடுத்து மூலக்கூறுகள் இப்படி தோற்றபிரபஞ்சம் உருவாக்கி இருக்கிறது .
3, புருஷன் என்பதைப்பார்ப்போம் . “எல்லா மனிதமனங்களையும் ஒன்றாக சேர்த்து உருவகிக்கப்பட்ட ஒற்றைப் பேரிருப்பே புருஷன்” என்கிறது யோகம் . ஆக இந்த பூமியில் ஒரே ஒரு உயிர்தான் இருக்கிறது . அது நீர்வாழ்வனவாகவும் , நிலம்வாழ்வனவாகவும் , நுண்ணுயிரிகளாகவும்
ஓர் அறிவு -- செடி, மரம். தொடு உணர்வு ---தோல்.
இரண்டு அறிவு --புழு, வண்டு. சுவை உணர்வு ---- நாக்கு.
மூவறிவு -- எறும்பு தேனீ, வாசனை உணர்வு --- மூக்கு.
நாலறிவு.-- நீந்துவன, பறப்பன.ஒளி உணர்வு. --- கண்..
ஐந்தறிவு -- விலங்குகள் யானை மான் ஒலி உணர்வு. --- காது.
ஆறறிவு,--- மனிதன் சிந்திக்கும் ஆற்றல் --- மனம், இப்படி பல்வேறு உயிரிகளாக பரிணமித்து இருக்கிறது . இந்த மூல உயிர் தோன்றி 350 கோடி வருடங்கள் ஆகிறது என்கிறது அறிவியல் . அன்றிலிருந்து பல்கிப்பெருகி இன்றுவரை இவ்வளவு நீட்சி பெற்றிருக்கிறது . அதுஒரே உயிர்தான் , பேருயிர் . யோகத்தின் பாஷையில் புருஷன் .
அப்போ நீங்கள் தனி உயிர் அல்ல ! உயிரின் அலகு செல் ஆகும் . இப்பிரபஞ்சத்தின் அலகு அணு என்பதைப்போல! . சுமார் 75 ட்ரில்லியன் செல்கள் கூடி கட்டியுள்ளது உங்கள் சரீரத்தை . இந்த சரீர சம்பந்தமுள்ள விஷயங்களையே ‘நான்’ என எண்ணுகிறீர்கள் . இப்படி பல லட்சக்கணக்கான விதவிதமான சரீரங்களை தோற்றுவித்து அவைகளுக்கு இந்த தான் எனும் ஆசையை ஊட்டி மாயையில் வைத்துள்ளது அந்த புருஷன் . ,கிட்டத்தட்ட எல்லா மகான்களுமே உங்களுக்கு ஓர் ஆத்மா இருப்பதாகவும் , அதை விழிக்க வையுங்கள் என்றும் சொல்லியுள்ளனர் . அறிவியலாக அந்த ஆத்மா என்பது என்ன ? என்று பார்க்கலாம் . 210 வகையான 75 ட்ரில்லியன் செல்கள் உங்கள் சரீரத்தை கட்டியுள்ளது . ஒவ்வொரு செல்லுமே தனி உயிரி . அவைகள் புறவயமாக இணைவதே இந்த சரீரம் ஆகும் . அவைகள் அகவயமாக இணைவது ஆத்மாவாகும் . ஆத்மா உங்களுக்கு மட்டும் தனித்ததல்ல ! இந்த பூமியின் மீது உள்ள அனைத்து உயிரினங்களுக்குமே அது பொதுவானதாகும்.

No comments:

Post a Comment