Saturday, April 30, 2011

தியானத்தில் சுவாசத்தின் பங்கு.

தியானம் செய்யும்பொழுது நமது சுவாசம் எப்படி நடக்கிறது என்று பார்ப்போம். சாதாரணமாக நாம் இருக்கும்பொழுது நமது சுவாசம் வலது நாசியில் சிறிது நேரமும், பின் இடது நாசியில் சிறிது நேரமுமென நமது உடலின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு சுவாசம் மாறுபட்டு ஓடிக்கொண்டிருக்கும்.

தொடர்ந்து வலது நாசியில் சுவாசித்துக்கொண்டிருந்தால் உடல் உஷ்ணமாக மாறும். தொடர்ந்து இடது நாசியில் சுவாசித்துக்கொண்டிருந்தால் உடல் குளுர்ச்சியாக மாறும்.

நாம் தியானம் செய்யும்பொழுது இரண்டு நாசியிலும் சமமாக சுவாசிக்கும்படி சுவாசத்தை அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். அந்த சுவாசத்தையும் நீண்ட சுவாசமாக, ஆழமாக உள்ளிழுத்து, நிதானமாக மெதுவாக சீராக வெளி விடுதல் வேண்டும்.

ஒரு பறவையின் சிறகை மூக்கின் அருகில் வைத்தால் வெளிவிடும் மூச்சு காற்றின் வேகத்தால் அசையாது இருக்கவேண்டும் என திரு. ஜக்கி வாசுதேவ் அவர்கள் கூறுகிறார்கள்..

அப்படி கவனமாக சீராக சுவாசத்தை நடத்துதல் வேண்டும். அவ்வளவு சீராக சுவாசத்தை நடத்தும்பொழுது உங்கள் முழுக்கவனமும் சுவாசத்திலேயே இருப்பதை உணர முடியும்.

முழுக்கவனமும் சுவாசத்திலேயே இருப்பது என்றால், உங்கள் உடலிலுள்ள 75 டிரில்லியன் செல்களும் ஒரே கவனத்துடன் செயல்புரிகிறது என பொருள்.
உங்கள் சுவாசமே உங்கள் உடலிலுள்ள செல்கள் சுவாசிக்கத்தான் நடக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் பிராண உடல் என்பது , உடலிலுள்ள 75 ட்ரில்லியன் செல்களும் பிராண தன்மையில் ஒரே சமச்சீராக, சீரான தன்மையில் இருப்பது தான்.

மெதுவாக, மிக மெதுவாக சுவாசம் நடைபெறுகையில் இது சுலபமாக சாத்தியப்படுகிறது.

மன உடலில் தியானம் முடிந்து இணைப்பு உடல் தியானதிற்குள் நுழையும்பொழுது , மன உடலின் எல்லையற்ற பிரகாசிப்புத்தன்மையை அப்படியே ( ஸ்டில் ) நிலை நிறுத்தும்பொழுது, உங்கள் வலது நாசியை சற்று தூக்கி நிறுத்தி,( இது நடராஜ தத்துவம் ) உடலிலுள்ள 75 ட்ரில்லியன் செல்களும் மேல் நோக்கி, புருவ மத்தியை நோக்கி, தங்களது சுவாச நிலைகளை திறந்து வைத்து பிராணன் வேண்டிஏந்தி நிற்க, இப்போது,
இந்த ஸ்தூல உடலில் சுவாசம் நின்றிருப்பதை காண முடியும்.

ஆனால், அனைத்து செல்களுக்கும் பிராண பரிவர்த்தனை தொடரும்.இந்த அதிசய நிகழ்வை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குவோம்.

ஒரு விவசாயி தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் முறை என்பது வாய்க்கால், மற்றும் பாத்திகள் அமைத்து தண்ணீரை வாய்க்கால் வழியாக கொண்டு போய் ஒவ்வொரு பாத்தியாக மடை மாற்றி நீர்பாய்சுவான். இது நமது ஸ்தூல உடலின் சுவாச முறை.

தியானதன்மையில் சுவாசத்தை நிலை நிறுத்துதல் (ஸ்டில்) என்பது, தற்கால விவசாய சொட்டுநீர் பாசனம் மாதிரி. சொட்டு நீர் பாசன முறையில் கிணற்று பம்ப் செட்டிலிருந்து மெயின் பைப் வழியாக தண்ணீர் தோட்டத்திற்கு சென்று, அதிலிருந்து பல்வேறு சிறு சிறு பைப்களின் வழியாக ஒவ்வொரு செடியின் அடியிலும் நீர் சொட்டு சொட்டாக விழ, ஒரே சமயத்தில் கிணற்று நீர் தோட்டத்தில் உள்ள அனைத்து செடிகளுக்கும் தவறாது போய் சேருவதைப்போல- உதாரணம் சொல்லலாம். ஒரு சொட்டும் வீணாவதில்லை. அனைத்து செடிகளுக்கும் ஒரே சீராக, சமச்சீராக நீர் சென்றடைகிறது.

தாவோ

எவன் ஒருவன் பூரண வெறுமையில் இருக்கிறானோ, அவன் பூரண அமைதியில் இருக்கிறான்.

விபத்து.

உங்கள் மனம் தினமும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறது அதன் வாயிலாக உனகள் மனதில் குப்பைக்கூளங்கள் சேர்ந்து அங்கங்கே அழுக்காகி விடுகிறது. நமக்கு இதை எப்படி சுத்தம் செய்வது என்பது பற்றி ஞானம் இல்லை. இது ஒருபுறமிருக்க சற்று ஒய்வு எடுக்கலாம் என நினைத்து அமைதியாக இருக்க நினைத்தால் , மனம் அந்த அழுக்குகளில் சிக்கி நமைச்சல் ஏற்ப்படுத்துகிறது . உடனே நீங்கள் அதை சொரிய ஆரம்பித்து விடுகிறீர்கள். இது ரோட்டில் நடக்கும் பொழுது இப்படி உங்களுக்கு நடந்தால் எதிரில் வரும் லாரியைக்கூட நீங்கள் கவனிப்பதில்லை.