Friday, January 22, 2010

இருபத்தைந்து : எல்லைக்கு உட்பட்டதும்-எல்லை அற்றதும்.


இந்த உடல் எல்லையுடையது.
உலகில் உள்ள பொருள் யாவும் அது அதற்க்கு ஒரு எல்லையுடன் இருக்கிறது.
சத்து-அசத்து, இருள்-ஒளி, சவம்-உயிர், இந்த ஆறு நிலைகளுடனும்
கலந்து இருப்பது எதுவோ அது எல்லையுடையது.

தூய நிலையான மகாமனத்துக்கு எல்லையே இல்லை.
அந்த மகாமனம் எல்லையற்றது.
நீங்கள் எப்போதாவது எல்லையற்ற ஒன்றை தரிசித்ததுண்டா?
நமது மனமும் எல்லைகளுக்கு உட்பட்டே இது வரை சிந்தித்து வந்துள்ளது.
எல்லைகளுக்கு உட்பட்டு சிந்திப்பதுவே மாயா.
அந்த மனத்தை(அதன் பழக்கம்) எல்லை அற்ற மகாமனத்திடம் சேர்த்தால், - ( ஸ்ரீ ரமண மகரிஷி கருத்தில் சொன்னால், உங்கள் உப்பு கட்டியை (மனம்) அந்த எல்லையற்ற கடலில் (மகாமனம்) கரைத்து விடுங்கள்)-
நீங்கள் வேறு இந்த உலகு வேறு எனும் தற்போதைய,
மாயா எனும் நிலை மாறும்.

Thursday, January 21, 2010

இருபத்துநான்கு : சென்னை செந்திலுடன் ஒரு உரையாடல்.


1,ஒரு மனிதன் எப்பொழுது தான், ஞான உணர்வை அடைய முடியும்? இது உங்கள் கேள்வி.
எந்த மனிதனும் தானே ஞான உணர்வை அடைந்து விடுவதில்லை. ஞான தேடல் உள்ளவர்க்கே
இது சித்திக்கும்.
ஞான தேடலும் அவ்வளவாக யாருக்கும் இருப்பதில்லை.
இந்த வாழ்க்கை மீது சற்றாவது சுரணை உள்ள மனிதருக்கே ஞான தேடல் வருகிறது.
நான் என்பது என்ன? பிறக்கும் முன் எங்கிருந்தேன்? இறந்த பின் எங்கே போகிறேன்? இந்த பூமி, வானம், அண்ட சராசரங்கள், காலம், வெளி, இயக்கம் இதெல்லாம் என்ன?
என் மூலம் என்ன? நான் எங்கிருந்து துவங்கினேன்? இந்த கேள்வி எல்லாம் உங்களுக்கு வந்தால்
உங்களுக்கு ஞான தேடல் இருக்கிறது என கொள்ளலாம். அல்லது,
தினமும் ருசியாக சாப்பிடுவது, நல்ல செக்ஸ் விளையாட்டு, உடம்பை சுகமாக (அதன் பழக்க சுபாவத்தை மீறாமல்) வைத்து கொள்வது , எங்கோ என்னவோ நடந்து விட்டு போகிறது என கவனமின்றி நடந்து கொள்வது, மொத்தத்தில் சோம்பலாக இருப்பது. சுய நலத்தை தவிர வேறு நோக்கமே இல்லாது இருப்பது. .................என்ன செய்வது இப்படி தான் எல்லோரும் இருக்கிறார்கள். அடுத்த கேள்விக்கு தொடர்ந்து பதில் எழுதுகிறேன்.
Reply



2,ஒரு மனிதனுக்கு ஞான தேடல் தீவிரமாக இருந்து,
சதா காலமும் தேடல் தீவிரமாகவும் சிரத்தையுடனும்
இருந்து
ஐம்புல உணர்வை தாண்டி ,
நமது தண்டு வட உணர்வான நமது மைய்ய இருப்பு உணர்வில் நமது கவனத்தை வைத்து,
நமது மனத்தை இந்த இருப்பு உணர்வில் நிலை நிறுத்தி ,
பிரபஞ்ச மைய்ய இருப்பு நிலையோடு ,
நமது மைய்ய இருப்பு நிலையை மனத்தால் பொருத்தி (எல்லோரும் மனத்தை கடந்து என்று சொல்கிறார்கள்) இருத்தி நிறுத்தினால் ,
நமது மைய்ய இருப்பும் பிரபஞ்ச மைய்ய இருப்பும் கலந்து
ஒரே இருப்பாக மாறுவதை காணலாம்.( அப்பொழுது மனம் தன சுய போக்கிலிருந்து மாறி அவனது ஆளுகைக்கு மாறுகிறது)
அந்த நிலையே பரிபூர்ண நிலை.
அதில் லயித்தவர்களுக்கு ஞானம் கிடைக்கிறது.
இதை நடை முறை படுத்துவது என்பது அவ்வளவாக சுலபமில்லை.
ஒரு மனிதனின் தீவிரத்தை பொறுத்தது அது.



3,மனம் என்பது மூன்று வித அடிப்படை கூறுகளில் செயல்படுவதாக தோன்றுகிறது.
சத்து, ஒளி, உயிர் என்பது அந்த மூன்றும்.
பிரபஞ்ச மனமும் இந்த மூலக்கூறுகளிலேயே இயங்குகிறது.
மனம் உடல்(பொருள்) சார்ந்த புலன்களின் வழியே செயல்படும் போது
சத்து-அசத்து., இருள்-ஒளி,. சவம்-உயிர்.
இந்த ஆறு நிலைகளில் கலந்து இயங்குகிறது.
பிரபஞ்ச மன உணர்வும் பொருள் தன்மையில் இயங்கு நிலையில்
இந்த ஆறு நிலைகளில் கலந்து இயங்குகிறது.
இந்த அசத்து, இருள், சவத்தன்மை, நிழல் போன்றது. (இதுவே மாயா).
நாம் தியானம் செய்ய துவங்கும்போது ஒரு மந்திரத்தை சொல்லச்சொல்லி ஞானமடைந்தவர்கள் சிபாரிசு செய்கிறார்கள்.
ப்ருஹ தாரன்ய கோபநிசத்தில் இந்த மந்திரம் சொல்லப்பட்டு இருக்கிறது.

அஸத் தோமா ஸத் கமய -
தமஸ் ஸோமா ஜ்யோதிர்கமய -
ம்ருத்யோர்மா அம்ருதங்கமய .


அஸத் திலிருந்து என்னை ஸத்துக்கு அழைத்துச்செல்;

அக்ஞான இருளிலிருந்து என்னை ஞான ஒளிக்கு அழைத்துச்செல்;

சாவுத்தன்மையிலிருந்து என்னை சாகாத தன்மையான ஞானத்துக்கு அழைத்துச்செல்.

இந்த கோரிக்கையை இந்த உடலில் இயங்கும் மனம், பிரபஞ்ச மனதிடம் யாசிக்கிறது. ......தொடரும்.



4,நண்பரே,
நீங்கள், நான், இந்த உலகு,
அந்த வானம், அண்ட சராசரம், சூரிய குடும்பம், பால்வீதி மண்டலம், எல்லாமே மனம் தான். மகாமனம்.
அந்த மகாமனத்தின் ஒரு துளிதான் நீங்கள்,மற்றும் நானும்.
நம்மால் பொருள்(உடல்,மற்றும் புலன்கள்) சார்ந்து எண்ணமிட முடிகிறது.
அந்த எண்ணமே 'நான்' என்று எண்ண தொகுப்பு ஆகிறது.
நாம் தூய நிலைக்கு போக விரும்பினால்,
அங்கு அசத்து, இருள், சவத்தன்மை கிடையாது.
அங்கு சத்து, ஒளி, உயிர் என ஆதி இருப்பு நிலையேஉள்ளது.

Tuesday, January 19, 2010

இருபத்துமூன்று : ஸ்ரீ ராம கிருஷ்ணரின் இறை அநுபூதி.


ஸ்ரீ ராமகிருஷ்ணர் தன்னுடைய இறை அனுபூதியை
சீடர்களுக்கு பின் வருமாறு கூறியுள்ளார்.
"பரம்பொருளின் காட்சி கிட்டிய பொழுது
வீடு, கதவு, கோயில் அனைத்துமே மறைந்து விட்டன.
எங்கும் எதுவுமே இல்லாதது போல் தோன்றியது.
எங்கும் எல்லையற்று ஒளி பரவி இருக்க கண்டேன்.
எங்கு நோக்கினாலும் ஒளி வெள்ளம்.
எல்லா திசை களிலிருந்தும் ஒளி,
மிக்க வேகத்துடன் என்னை சூழ்ந்து கொண்டு ,
எல்லையற்ற பரம்பொருளில் ஆழ்த்தியது .
ஒளி வெள்ளத்தில் மூழ்கி திணறி வெளி உணர்வை இழந்து விட்டேன்.
வெளி உலகில் என்ன நிகழ்கிறது என்பதே தெரியவில்லை.
அன்றைய தினமும் , மறு நாளும் எவ்வாறு கழிந்தன என்பது தெரியாது.
ஆனால்,
என் உள்ளத்தில் அளப்பரிய ஆனந்தம் பொங்கி ததும்பியது.

இருபத்தியிரண்டு : ஞானம்


புத்தருக்கு
என்றைய தினம் ஞானம் ஏற்ப்பட்டதோ அன்று,
மக்கள் அவரிடம் வந்து 'உங்களுக்கு என்ன கிடைத்தது?' என்று கேட்டனர்.
அவர்;
"அதைகேட்காதீர்கள் நான் எதை இழந்தேன் என்று கேளுங்கள்". என்றார்.
அவர்கள் புத்திக்கு அது எட்டவில்லை.
"எங்களுக்கு விளக்கமாக கூறுங்கள்!" என்றனர்.
புத்தர்: எனக்கு கிடைத்ததே இருந்ததைத்தான் அடைந்தேன்.
எது, என்னிடம் இல்லாதபோதும் இருப்பதாக நம்பிக்கொண்டு இருந்தேனோ ,
அதையே இழந்தேன் .
எது இருக்க வில்லையோ அதை இழந்தேன்:
எது இருந்ததோ ,அதை அடைந்து விட்டேன். என்றார்.

இருபத்தியொன்று :அருட்பிரகாசம்.


நமது நாபி முதல் புருவ மத்தி ஈறாக ஒரு நாடி இருக்கின்றது.

அந்த நாடி நுனியில் புருவ மத்தியில் ஓர் சவ்வு தொங்குகிறது.

அதன் அடிப்புறம் வெண்மை,

மேற்புறம் மஞ்சள்.

அச்சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறுவதும், இறங்குவதும்
அனுபவத்தால் விளங்கும்.

அகமாகிய ஆன்ம பிரகாசமே ஞான சபை.

அந்த பிரகாசத்துக்குள்ளிருக்கும் பிரகாசமே கடவுள்.

அந்த உள்ளொளியின் அசைவே ஞானாகாச நடனம்.

இருபது : வள்ளலாரின் வாக்கு.


அருவான பிரம்மத்தை அறிவோர் அறிக:

உருவாக அன்பு செய்வோர் அன்பு செய்க.

சுத்த பிரம்மம் உரை மனத்திற்கு எட்டாத பூர்ணம்.

மனோலயமான பின்பே பிரம்மானுபவம் எய்தும்.

மனம் சிறிது கிளம்பினாலும் ஆத்மா ஞானம் விளங்காது.

பிரம்மத்தை ஆத்மா ஞானத்தாலே அறியலாம்.

Monday, January 18, 2010

பத்தொன்பது : உபநிஷத்.


அஸத் தோமா ஸத் கமய -
தமஸ் ஸோமா ஜ்யோதிர்கமய -
ம்ருத்யோர்மா அம்ருதங்கமய .


1,அஸத் திலிருந்து என்னை ஸத்துக்கு அழைத்துச்செல்;

2,அக்ஞான இருளிலிருந்து என்னை ஞான ஒளிக்கு அழைத்துச்செல்;

3, சாவுத்தன்மையிலிருந்து என்னை சாகாத தன்மையான ஞானத்துக்கு அழைத்துச்செல்.
----ப்ருஹ தாரன்ய கோபநிசத்.